மிக சாதாரண மனிதன் தன் இதயத்தில் ஏழுமலையானை பக்தியோடு வழிபட்டால். அவருடைய தரிசனம் பிரமிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் . இந்த பதிவில் எங்களுக்கு கிடைத்த திருப்பதி ஏழுமலையான் தரிசனமும் மற்றும் எங்கள் பயண அனுபவங்கள் பற்றி கூற உள்ளோம். நாங்கள் 13 செப்டம்பர் 2019 அன்று திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை பெற்றோம். நாங்கள் இந்த தரிசனம் பெற கிட்டத்தட்ட ஆறு மாத காலம் ஏழுமலையானை எங்கள் இதயத்தில் வைத்து பிரார்த்தனை செய்து வந்தோம். நாங்கள் குடும்பத்துடன் சென்று வழிபட்டு வந்தோம். ஏன் நாங்கள் ஆறுமாதம் முன்பே இந்த பயணத்தை பற்றி திட்டங்களை வகுத்தோம் என்றால். சிறு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வருவதால் அவர்களுக்கு எந்தவித சிரமம் இல்லாமல் இருக்க. நாங்கள் எங்கள் தரிசன Ticket_ஜ மூன்று மாதங்களுக்கு முன்பு திருப்பதி online-ல் பதிவு செய்து கொண்டோம். ஒருவேளை தாமதம் ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு online ticket கிடைப்பது கடினமான ஒன்று. எங்களுடைய அதிர்ஷ்டம் எங்கள் எல்லோர்க்கும் Ticket கிடைத்து விட்டது. அதேசமயம் எங்கள் அதிர்ஷ்டம் நாங்கள் திருப்பதி மலையில் தங்குவதற்க்கும் online_ல் Ticket கிடைத்தது ம...