Skip to main content

Posts

Showing posts from 2016

ஓ மனிதா…

ஓ மனிதா …!  இம்மண்ணில் வந்து சற்றே தங்கிச்செல்பவன் நீ… மிடிமையால் இழிவடைந்தவன்…  அதிகாரத்தால் சீரழிந்தவன்… உன்னை அறிந்தவர் அருவருத்து விலகுவர்.… உயிர்கொண்ட புழுதியின் தரம்கெட்ட குவியல் நீ.… உனது அன்பு வெறும் ஆசை…. உனது நட்போ ஏமாற்று.… உனது புன்னகை போலி.…  உனது சொற்களோ மோசடி.… இயற்கையிலேயே கீழ்மையானவன் பெயரால் மட்டுமே உயர்ந்தவன்.… உன் சொந்தங்களாகிய ஒவ்வொரு மிருகமும் உன்னை வெட்கத்தால் கூசிச்சிவக்கச் செய்யும்… தற்செயலாக இந்த எளிய கலத்தை வாங்கிக் கொண்டவனே அதை கைமாற்று.… இது நீ துயரம் கொள்ள விரும்பும் எவரையும் கொண்டிருக்கவில்லை… ஒரு நண்பனின் மிச்சங்களை அடையாளம் செய்ய எழுந்துள்ளன இந்த நடுகற்கள் வேறொன்றுமில்லை…. ஆம் இதோ அவன் கிடக்கிறான்…!!!

காதல் என்றால் என்ன…???

காதல் என்றால் என்ன…??? என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன்…!!! நம் ஆளுமை திரவமாக கரைந்து… புகையாக உருவிழந்து… இன்னொருவரை முழுமையாகச் சூழ்ந்துகொள்ளுதல் என்று சொல்வேன்… ஆணவம் அழிந்து… தன்னிலை கரைந்து… பிறிதொருவருக்காகவே… ஒவ்வொரு கணமும் வாழ்ந்துகொண்டிருத்தல் என்பேன்… நீங்க அதைப் புரிந்துகொள்வீர்களா…??? பெண்களுக்கும் காதல் என்றால் அப்படித்தானா…? தெரியவில்லை.…!!! ஏன் என்னுடைய உணர்வுகள்தானா பிறருக்கும்…??? என்னுடையது ஓரு மனச்சிக்கலா…??? நான் சறுக்கிச் சென்று கொண்டே இருந்த என் பாதையை அஞ்சி அழுத்தமாகப் பிடித்துக் கொண்டேனா…??? சமநிலையிழந்த  எந்த சிந்தனைகளையும் மனச்சிக்கல் என்று சொல்பவர்கள் உண்டு…. அப்படியானால்… இதுவும் ஒரு மனச்சிக்கல்.… ஒரு மனநோய்… என் நண்பன்  என்ன சொல்வான்…??? காமம் என்று சொல்வான்.…??? அவனைப்போன்ற அறிவுஜீவிகள் எதையும் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள முயல்பவர்கள்.… எல்லாவற்றையும் திட்டவட்டமாக ஆக்கிக் கொள்ள முடியாதென்பதையே அறியாதவர்கள்.… திட்டவட்டமாக ஆக்கிக் கொள்ளும் போது ஒவ்வொன்றும் எளிமைப்படுத்தப்படுகின்றன, நிலைக்க

கழியுகம்:

கழியுகம்…!!! கிருஷ்ணன்… கடைசி… அவதாரம் … ஆரம்பித்துவிட்ட து… லெளதீக வாழ்க்கை… ஒரு பிசசு…!!! *****ஆன்மீகமான செயல் செய்க…!!!

நிகழா உறவுகள:

உலகத்தை அழகுபடுத்த… மிச்சமிருப்பவை… இன்னும்… பிறவாக் குழந்தைகள்… இன்பமாக… மிச்சமிருப்பவை… அவை… ஜனிப்பதற்கு… நிகழா… உறவுகள்…!!!

ஒரு நிமிஷம்:

உயிர் பிரிவதற்கு… எப்போதும்… ஒரு நிமிடம்தான்… இருக்கிறது…!!! மகிழ்ச்சி… துண்டிக்கப்பட்டு… துயரத்தில் சாய்வதற்கும்… எப்போதும் … ஒரு நிமிஷம்தான்… இருக்கிறது…!!! இருட்டு… பயம்… திகைப்பு… இவற்றின்… இருண்ட சரிவில்… உருள்வதற்கும்… எப்போதும் … ஒரு நிமிஷம்தான்… இருக்கிறது…!!! இவ்வொரு… நிமிஷத்தில்… அண்டசராசரம் ஆடி… ஒரு நிமிஷம்… வளர்ந்து விடுகிறது…!!! *****Please ஒரு நிமிஷம்…