Skip to main content

காதல் என்றால் என்ன…???



காதல் என்றால் என்ன…???

என்று என்னையே
கேட்டுக்கொள்கிறேன்…!!!

நம் ஆளுமை திரவமாக
கரைந்து…

புகையாக உருவிழந்து…

இன்னொருவரை முழுமையாகச்
சூழ்ந்துகொள்ளுதல் என்று சொல்வேன்…

ஆணவம் அழிந்து…

தன்னிலை கரைந்து…

பிறிதொருவருக்காகவே…

ஒவ்வொரு கணமும்
வாழ்ந்துகொண்டிருத்தல் என்பேன்…

நீங்க அதைப் புரிந்துகொள்வீர்களா…???

பெண்களுக்கும் காதல் என்றால்
அப்படித்தானா…?

தெரியவில்லை.…!!!

ஏன்
என்னுடைய உணர்வுகள்தானா பிறருக்கும்…???

என்னுடையது ஓரு மனச்சிக்கலா…???

நான்
சறுக்கிச் சென்று கொண்டே இருந்த என்
பாதையை அஞ்சி அழுத்தமாகப்
பிடித்துக் கொண்டேனா…???

சமநிலையிழந்த  எந்த
சிந்தனைகளையும் மனச்சிக்கல் என்று
சொல்பவர்கள் உண்டு….

அப்படியானால்…

இதுவும் ஒரு மனச்சிக்கல்.…

ஒரு மனநோய்…

என் நண்பன்  என்ன சொல்வான்…???

காமம் என்று
சொல்வான்.…???

அவனைப்போன்ற அறிவுஜீவிகள்
எதையும் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள
முயல்பவர்கள்.…

எல்லாவற்றையும் திட்டவட்டமாக
ஆக்கிக் கொள்ள முடியாதென்பதையே
அறியாதவர்கள்.…

திட்டவட்டமாக ஆக்கிக்
கொள்ளும் போது ஒவ்வொன்றும்
எளிமைப்படுத்தப்படுகின்றன, நிலைக்க
வைக்கப்படுகின்றன என்பதை அறியாதவர்கள்.…

நீரை கையில் எடுக்க அதை பனிக்கட்டியாக
உறைய வைக்க வேண்டும்….

காமமா…???

இருக்கலாம்…

நீங்களூம் அதையே
சொல்லலாம்.…

ஆனால் …

இல்லை இல்லை இல்லை…

என்றே நான் ஆவேசமாகக் கூவுவேன்.…

காமத்தை நான் அறிந்திருக்கிறேன்.…

காட்டுத்தீபோன்று …

சூழ்ந்தெரியும் காமத்தை….

கடந்த மூன்று வருடங்களாக அதன்
அனல்காற்றின் வெம்மையில் ஒவ்வொரு
கணமும் வாழ்ந்துகொண்டிருப்பவன் நான்.…

காமத்தில் சுயசமர்ப்பணம் இல்லை…

காமத்தில்
தியாகம் இல்லை….

காமத்தில் நாம் ஒரு கணம்
கூட இல்லாமலாவதில்லை…

காமத்தில்
நாம் எதையுமே கொடுப்பதில்லை….

அதில்
நாம் ஒவ்வொரு கணமும் நம்மையே
பார்த்துக்கோண்டிருக்கிறோம்.…

சதுரங்கம்
விளையாடும் ஆட்டக்காரன் இம்மியேனும்
தன்னை மறப்பானா என்ன…???

அவன் முன்
பரப்பப்பட்டிருக்கும் சதுரங்கக்காய்கள்
உண்மையில் பருவடிவம் கொண்ட அவனுடைய
மனம்தான் அல்லவா…???

காமம் ஒரு முடிவிலாத போர்.…

அங்கே
வெலவது ஒன்றே இலக்கு என இரு உடல்கள்
போராடுகின்றன….

உள்ளத்தை ஆயுதமாக
ஆக்கி உடல் நிகழ்த்தும் சமர் அல்லவா அது…???

காமத்தில் முன்வைக்கபப்டும் ஒவ்வொன்றும்
பிறிதொன்றே.…

காமத்தில் சொல்லபப்டும்
ஒவ்வொன்றும் சொல்லப்படாத ஒன்றே.…

பாம்பு எடுக்கும் படத்தை நம் ஏன்
அஞ்சுகிறோம்…???

அது அழகானதுதான்.…

ஆனால்…

அது விஷம் என்பதன் வேறு ஒரு தோற்றம்…

காமத்தின் உச்சத்தில் நம் அகங்காரம் மட்டுமே
மலைச்சிகரநுனி மீது தன்னந்தனிமையில்
நிற்கக் காண்கிறோம்…

ஆனால்…

நான் கற்ற கல்வியும் நான் வாசித்த
நூல்களும் என்னை கைவிடுகின்றன.…

நான்
சொல்லிச் சொல்லி வந்து என்ன சொல்கிறேன்
என்ற திகைப்பின் முனையில் நின்று
கொண்டிருக்கிறேன்.…

இதை மட்டும்
சொல்கிறேன்.…

காமம் வண்ண ஆடைகளில்,
மின்னும் அணிகளில் தன்னை
வெளிப்படுத்திக் கொள்வது.…

காதல்
அம்மணக்குழந்தை போல களங்கமில்லாத
அப்பட்டம்…!!!

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந்தது

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சனிவார்வாடா (Shaniwarwada)-Pune

  நான் புனேக்கு (Pune) எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். எனக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி புனேவை சுற்றி பார்க்க விருப்பமாக இருந்தது. அலுவலகத்தில் பயணத்திற்கான நேரத்தை பெற்று கொண்டு (14.04.2023) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. நான் தங்கி இருக்கும் Hotel விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார்.  பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது.  முதலில் நான் சனிவார்வாடா பயணித்தேன்... இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம். சனிவார்வாடா , மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம