Skip to main content

Posts

Showing posts from July, 2020

வள்ளுவரே கற்று கொடுத்தார்...!

எனக்கு கதை எழுத ஆசை..!  ஆனால் கற்பனை எழும்ப வில்லை..! கவிதை வடிக்க ஆசை..!  ஆனால் கருத்து வழிய வில்லை..! நான் எழுதி அனுப்பியிருந்த ஏழு எட்டு கதைகளை ஒரு பத்திரிகை கூட பிரசுரிக்க வில்லை... எப்படி போடுவார்கள், புரியாத விஷயங்களை சொன்னால்..?  யாருக்கு வேண்டும் எனது வெட்டி வேதாந்தமும், வறட்டு நடையும்... எனது கதைகளை, என்னாலையே படிக்க முடியவில்லை...  அவ்வளவு வள வள..!  எனது கவிதையை திட்டி அனுப்பியிருந்தார்கள், அடிக்காத குறைதான். அபத்த களஞ்சியம். இதில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் எனது மனைவி... “ஏங்க..! ஏன் இப்படி இருக்கீங்க..?  உங்களை யாரு கதை எழுதலேன்னு அடிச்சாங்க..?  ஒண்ணு மோட்டு வளையை பாக்கிறீங்க. இல்லே தூங்கி போயிடறீங்க..? உருப்படியாக வேறே ஏதாவது வேலையை பாருங்க”. “வராது..! வராது..! கதை எனக்கெழுத வராது..!” அலுத்துக்கொண்டேன் நான்... நான் தலையில் அடித்துக்கொண்டேன் திருவிளையாடல் தருமி மாதிரி... சீத்தலை சாத்தனார் போல் தலை வீங்கி விட்டது... ‘கடவுளே எனக்கு உதவி செய்ய மாட்டாயா..? கவலையில் அப்படியே நாற்காலியிலேயே தூங்கியும் போய்விட்டேன்.

மகேந்திரன் & வினோத் சதுரகிரி மலை பயணம்

மகேந்திரன் & வினோத் நான் எனது இந்த இரண்டு நண்பர்களின் அவர்களின் சதுரகிரி பயண அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டபோது... நான் 2016 ஆண்டில் நான் சதுரகிரி பயணம் சென்றது என்கண்முன்னே வருகிறது...  இதை படிக்கும் அனைவருக்கும் இங்கு பயணம் செய்தவர்களுக்கும் இனிமேல் பயணம் செய்ய விரும்புவர்களுக்கும் மகேந்திரன் & வினோத் பயணங்கள் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும்... சதுரகிரி சுந்தரமகாலிங்கம்  சதுரகிரியும் மற்றும் திருவண்ணாமலையும் எத்தனை முறை சென்றாலும்... ஒவ்வொரு முறையும் அதன் பிரம்மாண்டத்தை உணர்த்துவதில் தவறியதே இல்லை... இன்று மகாலிங்க மலையைப் பற்றி நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை.. உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்... நாங்கள் 07-02-2020 வெள்ளிக்கிழமை இரவு கந்தர்வகோட்டையில் இருந்து மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டை மறுநாள் காலையில் சனிக்கிழமை அடைந்தோம்... பிறகு அங்கு இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸில் சென்று தாணிப்பாறை விலக்கில் இறங்கினோம் ... பிறகு ஆட்டோவில் அங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்று சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை