Skip to main content

Posts

Showing posts from February, 2021

நீதி கோயில்

நீதி கோயில் என்று பொருள்படும் நய்ய மந்திர், இந்தியாவில் பைசண்டைன் கட்டிடக்கலை.   இது மேற்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் வதோதரா நகர மாவட்ட நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது.   மத்திய மண்டபம் மொசைக் ஓடுகள் மற்றும் மகாராஜா சயாஜிராவ் கெய்க்வாட்-III இன் மனைவி சிம்னாபாயின் சிலை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவரது மகாராணியின் நினைவாக 'தி மஹாராணி சிம்னாபாய் மார்க்கெட்டுக்கு' இந்த கட்டிடம் சுற்றி நமது சென்னை தி.நகர் போல் அமைந்துள்ளது. அவர் தன் மறைந்த மனைவியை நினைவுகூர்கையில் நேசமான பெண்,  அர்ப்பணிப்புள்ள தாய் மற்றும் அன்பான மனைவி. இங்கு பல குற்றங்களுக்கு நீதி வழங்கப்படும் சபையாகவும் இருந்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சி காலத்திலும் இது நீதிமன்ற கட்டிடமாக இருந்துள்ளது. இந்த கட்டிடங்களை சுற்றி சாலையோர வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரம்மாக கெண்டுள்ளனர். *****இந்த சாலையில் நடை பயணம் செல்லும் போது இந்த கட்டிடம் பற்றி சில தகவல்கள்.

பாதைகள்

வெவ்வேறுவகையான ஊர்கள் வழியாகக் கடந்துசெல்வது மிக அவசியமானது... இளமையில் தான் பிறந்து வளர்ந்த சூழலில் இருந்து அறியாச்சூழலுக்கு வாழ்வுதேடிச் செல்பவன் ஒரு பெரிய அனுபவத்தை அடைகிறான்... அந்தக் கிளர்ச்சியும், கொண்டாட்டமும் வாழ்க்கையில் வேறெப்போதும் வராது... அவன் தன்னுடைய சாத்தியக்கூறுகளை கண்டடைகிறான்... அது தன்னைத்தானே கண்டடைதல்... என் வாழ்க்கையில் நான் பல ஊர்களில் வாழ்ந்திருக்கிறேன்... இளைஞனாக அலைந்து திரிந்த ஊர்கள் தேனி, திண்டுக்கல், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பதி & குஜராத் என பல.  அது தவிர இப்போது அலைந்துகொண்டேதான் இருக்கிறேன்... என் ஒவ்வொரு பயணமும் ஒரு துளிவாழ்க்கைதான்...!