Skip to main content

Posts

Showing posts from April, 2023

SMR பிரதீப்

பாலிமர் நியூஸில்....பரபரப்பான தேனி பழைய பேருந்து நிலையம் நேரு சிலை அருகில் தனது குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் மட்டும் அவருடைய இரண்டு குழந்தைகள் மர்ம நபரால் சுட்டுக் கொலை. கொலையாளி கூட்ட நெரிசலில் தப்பி ஓட்டம். கொலையாளியை பிடிக்க தேனி காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் நான்கு தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.. அம்மா சமையலறையில் இருந்து "டேய் பிரதீப் மணி ஆறு ஆக போவுது இந்த நியூஸ் பாக்காம எந்த வேலையும் செய்றதா இல்லை நீ, நானும் தினம் தினம் சொல்லிட்டு தான் இருக்கேன் தயவுசெய்து போலீஸ் ஆகற கனவை விட்டுட்டு ஏதாவது ஒரு நல்ல வேலைக்கு போய் நாலு காசு சம்பாதிச்சா தான் உனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு குடுப்பாங்க, உங்க அப்பாவும் போலீஸ் வேலையில் இருந்து ரிட்டையர்டு ஆகப் போறாரு எனக்கும் வயசு ஆயிடுச்சு அதுக்கு மேல உன் தங்கச்சி இருக்கா பாத்துக்கோ" சமையலறையில் அப்பாவிற்கு டிபன் பாக்ஸில் சாப்பாடு கட்டி கொண்டே அம்மா கத்திக் கொண்டு இருந்தாள். "அம்மா சொல்றத பெருசா எடுத்துக்க வேணாம் அண்ணா" பிரதீப்புக்கு காப்பியை கொடுத்து விட்டு சென்றால் அ

Pune-ஆகா கான் அரண்மனை

  ஆகா கான் அரண்மனை 1892 இல் கோஜா இஸ்மாயிலி பிரிவின் 48வது ஆன்மீகத் தலைவரான சுல்தான் முகமது ஷா ஆகா கான் [III] என்பவரால் கட்டப்பட்டது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, ​​மகாத்மா காந்தி, அவரது மனைவி கஸ்தூரிபா, மற்றும் தனிப்பட்ட செயலர் மகாதேவ் தேசாய் ஆகியோர் ஆகஸ்ட் 9, 1942 முதல் இங்கு அடைக்கப்பட்டனர். மீராபென், சரோஜினி நாயுடு, சுசீலா நாயர் மற்றும் பியாரேலால் நாயர் ஆகியோரும் இங்கு சிறையில் அடைக்கப்பட்டனர்.  தேசாய் கைது செய்யப்பட்ட ஆறு நாட்களுக்குப் பிறகு மாரடைப்பால் இறந்தார், மேலும் 18 மாதங்கள் நீடித்த நோய்க்குப் பிறகு கஸ்தூர்பா இறந்தார்.  அவர்களின் சமாதி வளாகத்தில் அமைந்துள்ளது.  புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் சார்லஸ் கொரியாவால் வடிவமைக்கப்பட்ட வெள்ளை பளிங்கு நினைவுச்சின்னம் இன்னும் உள்ளது.  மே 6, 1944 அன்று ஆகா கான் அரண்மனையிலிருந்து காந்தி விடுவிக்கப்பட்டார். 1969 இல், இளவரசர் ஷா கரீம் அல் ஹுசைனி, ஆகா கான் IV, அரண்மனையை இந்திய அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார். 2003 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையால் (ASI) இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஆகா கான்