Skip to main content

SMR பிரதீப்

பாலிமர் நியூஸில்....பரபரப்பான தேனி பழைய பேருந்து நிலையம் நேரு சிலை அருகில் தனது குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் மட்டும் அவருடைய இரண்டு குழந்தைகள் மர்ம நபரால் சுட்டுக் கொலை. கொலையாளி கூட்ட நெரிசலில் தப்பி ஓட்டம். கொலையாளியை பிடிக்க தேனி காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் நான்கு தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்..


அம்மா சமையலறையில் இருந்து "டேய் பிரதீப் மணி ஆறு ஆக போவுது இந்த நியூஸ் பாக்காம எந்த வேலையும் செய்றதா இல்லை நீ, நானும் தினம் தினம் சொல்லிட்டு தான் இருக்கேன் தயவுசெய்து போலீஸ் ஆகற கனவை விட்டுட்டு ஏதாவது ஒரு நல்ல வேலைக்கு போய் நாலு காசு சம்பாதிச்சா தான் உனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு குடுப்பாங்க, உங்க அப்பாவும் போலீஸ் வேலையில் இருந்து ரிட்டையர்டு ஆகப் போறாரு எனக்கும் வயசு ஆயிடுச்சு அதுக்கு மேல உன் தங்கச்சி இருக்கா பாத்துக்கோ" சமையலறையில் அப்பாவிற்கு டிபன் பாக்ஸில் சாப்பாடு கட்டி கொண்டே அம்மா கத்திக் கொண்டு இருந்தாள்.


"அம்மா சொல்றத பெருசா எடுத்துக்க வேணாம் அண்ணா" பிரதீப்புக்கு காப்பியை கொடுத்து விட்டு சென்றால் அவன் தங்கை மலர்.


மலருக்கு விவரம் அறிந்த நாள் முதல் தன் அண்ணன் பிரதீப் தனக்கு தேவையான அனைத்தையும் ஒரு தந்தை போல் முன் நின்று அனைத்து உதவிகளையும் செய்து கொண்டு இருக்கிறான்.


மலருக்கு இரண்டு வயதாக இருந்தபோது அவருடைய தந்தை ஒரு போராட்டத்திற்கு காவலர் பாதுகாப்புக்காக சென்றபோது அங்கு ஏற்பட்ட விபத்தில் பெருத்த காயம் அடைந்து மருத்துவ மனையில் ஒரு வருட காலம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் உள்ள போது அம்மா அவரை கவனித்துக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது அந்த சமயத்தில் பிரதீப் மலரை கவனித்துக் கொண்டான்.


மலர் கொடுத்த காபியை குடித்துக்கொண்டே அனைத்து நியூஸ் சேனலில் இருந்தும் இந்த தேனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை தான் தலைப்புச் செய்தியாக காட்டி கொண்டு இருந்தார்கள். 


மேலும் துப்பாக்கி சுட்டதில் இறந்தவர் தேனியை சேர்ந்த ஆசிரியர் சன்னாசி மற்றும் அவரது குழந்தைகள் என்பதும். இவர் தேனியில் உள்ள NS பள்ளியில் வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் அதே பள்ளியில் இந்த இரண்டு குழந்தைகள் படித்து கொண்டு இருந்தார்கள் என்பதை செய்திகளில் சொல்லி கொண்டு இருந்தார்கள்.


'டேய் பிரதீப் அப்பாவுக்கு நைட் சாப்பாடு கட்டி வச்சிருக்கேன் அவருக்கு போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு போய் கொடுத்துவிடு டா" என்றால் அம்மா.


"ஏம்மா அப்பா டூட்டி முடிஞ்சு வீட்டுக்கு வர நேரம் தானே எதுக்கு அண்ணன் அப்பாவுக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுக்கணும்" என்றால் தங்கை மலர்.


"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அப்பா எனக்கு போன் பண்ணி ஏதோ எமர்ஜென்சி கேஸ் வந்திருக்கு அதனால சாப்பாடு பிரதீப் கிட்ட கொடுத்து அனுப்பு என்று சொன்னார் டி" அம்மா.


டிவியை ஆப் செய்து விட்டு டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு எனது ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கில் நேராக அப்பா வேலை செய்யும் போலீஸ் ஸ்டேஷன் சென்று அடைந்தேன்.


ஏட்டு சுப்பு என்னை பார்த்துவிட்டு என்ன விஷயமா வந்திருக்க பிரதீப்...?


அப்பாவுக்கு சாப்பாடு கொண்டு வந்து இருக்கேன்.


அப்படியா அவர் சீட்டுக்கு பக்கத்துல வச்சிட்டு போ.


அப்பா எங்க...?


அவரு ஒரு கேஸ் விஷயமா தேனி பழைய பஸ் ஸ்டாண்டுக்கு போய் இருக்காரு.


ஓகே அங்கிள் அப்பா வந்தா சாப்பாடு வச்சுட்டு போய் இருக்கேன்னு சொல்லிருங்க.


தம்பி சார் வர்றதுக்கு நேரம் ஆகும்.


ஏன்...?


சாயங்காலம் எவனோ ஒருத்தன் தேனி பழைய பஸ் ஸ்டாண்ட்ல பைக்ல போயிட்டு இருந்தா ஒரு ஆளும் அவனோட ரெண்டு குழந்தைகளை சுட்டுட்டு தப்பிச்சு ஓடிட்டான்பா...! அந்த கேசு விஷயமா தான் எல்லா போலீசும் அங்க போயிருக்காங்க.


ஓஹோ..ஓகோ...அப்படியா...! என்று சொல்லிவிட்டு அங்கிருந்து என் பைக்கை எடுத்துக்கொண்டு நான் கிளம்பிவிட்டேன்.


சிறிது தூரம்தான் சென்று இருந்தேன்.


டேய் பிரதீப் மச்சி...டேய் பிரதீப் மச்சி... என்று வீரபாண்டி திருவிழாவில் காணாம் போனவர்களை மைக்கில் அழைப்பது போன்று எனது நண்பன் ரமேஷ் என்னை அழைத்தான்.


நான் உடனடியாக வண்டியை நிப்பாட்டி விட்டு அவனுக்காக காத்திருந்து அவனை எனது பைக்கில் ஏற்றிகொண்டேன்.


"என்னடா பிரதீப் இந்த பக்கம் அப்பாவை பார்க்க வந்தியா...?" ரமேஷ் கேட்டான்.


ஆமாடா மச்சி.


"பிரதீப் நம்ம பாண்டியண்ணன் கடைக்கு போயிட்டு ஒரு தம் ஒரு டீயும் அடிச்சிட்டு போவோம்" என்று கேட்டான் ரமேஷ்.


முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே... பாடல் பாண்டி அண்ணன் டீ கடையில் கொடைக்கானல் FM ரேடியோவில் பாடி கொண்டு இருந்தது.


"வாங்கடா தம்பிகளா பிரதீப், ரமேஷ்" பாண்டி அண்ணன் எங்களை வரவேற்றார்.


"என்னடா பாட்டு இது, பாட்டு கேட்கும் போது நல்லா லவ் வருது, லவ் பண்ணினதுக்கு அப்புறம் சோகத்தில போய் முடியுது...!, பாண்டி அண்ணா உனக்கு இந்த வயசுல லவ் பாட்டு கேக்குதா...?" என்றான் ரமேஷ்.


"டேய் விளக்கெண்ணே ரமேஷ் அது கொடைக்கானல் FM டா..."சிகரெட்டை பிரதீப்பிக்கும், ரமேஷுக்கும் கொடுத்துவிட்டு பாண்டி அண்ணன் டீ போட கிளாஸை எடுத்தார்.


பிரதீப் இருக்கும் இடத்தை சுற்றி எப்பொழுதும் கலகலப்பாகவும் சந்தோசமாகவும் சிரிப்பொலியும் இருக்கும். 


ஆனால் பிரதீப்பிடம் இப்போது அந்த கலகலப்பு இப்போது இல்லை.


காரணம்...


கடந்த மாதம் பிரதீப்பின் காதலி நேபாளத்திற்கு கல்லூரி சுற்றுலா சென்ற போது அங்கு விமான விபத்தில் உயிரிழந்தாள்.


பிரதீப் எப்படியாவது அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் தங்களுடன் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று அவன் நண்பர்களும் அவனை சார்ந்தவர்களும் விரும்பினார்கள். 


தேனியில் பதற்றம்... மீண்டும் அந்த துப்பாக்கியால் சுட்ட கொலை பற்றி கொடைக்கானல் FM செய்தியில் கூறினார்கள். 


டேய் பிரதீப், உனக்கு இஞ்சி டீ வேணுமா...? இல்ல ஏலக்காய் டீ வேணுமா...? பாண்டி அண்ணன் கேட்டார்.


"இஞ்சி டீ போடு அண்ணா" என்றான் ரமேஷ்.


இருவரும் தம், டீயை குடித்துவிட்டு பைக்கில் ஏறும் போது, "டேய் பிரதீப் ஃப்ரீயா இருந்தா கடைக்கு வாடா பேசிட்டு இருப்போம்" என்றார் பாண்டியன் அண்ணன்.


பிறகு நானும் ரமேஷும் தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் கொலை நடந்த ஸ்பாட்டுக்கு சென்றோம்.


அங்கு காவல் ஆய்வாளர் மோகன் அவர்கள் அனைத்து போலீஸ்காரர்களையும் மிக கடுமையான சொல்லால் திட்டிக் கொண்டிருந்தார், அதில் முக்கியமாக எனது அப்பாவை மிக கடுமையாக திட்டிக் கொண்டிருந்தார் அது எனது மனதிற்கு வேதனை அளித்தது உடனே அங்கிருந்து நானும் ரமேஷும் கிளம்பி விட்டோம்.


நாங்கள் சென்று கொண்டிருந்தபோது ரமேஷ் டாஸ்மாக்கை பார்த்தவுடன் மச்சான் சரக்கு அடிக்கலாம் மச்சான் வாங்கிட்டு போய் உங்க தாத்தா தங்கியிருக்கிற மொட்டை மாடிக்கு போயிடலாம் என்றான் ரமேஷ்.


இரண்டு பீரும் ஒரு புல்லும் வாங்கிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் பிரியாணி, கொத்து புரோட்டா, ஆம்லெட், பொடிமாஸ், சிக்கன் வருவல், மட்டன் சுக்கா வாங்கிக்கொண்டு அருகில் உள்ள சிறு கடையில் பிளாஸ்டிக் கப் மற்றும் சிகரெட் பாக்கெட் வாங்கி கொண்டு கிளம்பினோம்.


போகும்போது எங்கள் இருவருக்குள் ஏதோ ஒன்றை வாங்க மறந்து விட்டோம் என்று எண்ணம் இருந்தது பிறகு யோசித்துப் பார்த்தபோது ஊறுகாய் மறந்து விட்டோம். 


பிறகு ஊறுகாயை வாங்கிக் கொண்டு தாத்தா தனியாக தங்கி இருக்கும் மொட்டை மாடிக்கு சென்றோம்.


"டேய் பிரதீப் எப்படிடா உங்க தாத்தா  தனியா மொட்டை மாடியிலேயே இத்தனை காலம் வாழ்கைய ஓட்டிகிட்டு இருக்காரு...? " என்றான் ரமேஷ்.


இதுநாள் வரைக்கும் நான் அந்த விஷயத்தை பத்தி எங்க தாத்தா கிட்ட நான் கேட்டதும் இல்ல எங்க தாத்தா என்கிட்ட சொன்னதும் இல்லை.


"ஆனா உங்க தாத்தா தேனி ஸ்ரீராம் தியேட்டர்ல இருத்தப்போ தியேட்டர் சுத்தமா இருந்துச்சு எந்த ஒரு ரவுடிசமும் இல்ல குடும்பத்தோட எல்லாரும் வந்து படபாக்குறாங்க...அவரு தியேட்டர்ல இருந்த வரைக்கும் தியேட்டர் ஃபர்ஸ்ட் கிளாஸ்ஆ இருந்துச்சு டா. நாம உங்க தாத்தா தங்கி இருக்கிற இடத்துல தண்ணி அடிச்சா அவரு நம்மள மட்டும் எதுவுமே சொல்றதில்லை" என்றான் ரமேஷ்.


"அதே ஏன்னு எனக்கும் தெரியல டா ரமேஷ்" என்றேன்.


நாங்கள் தாத்தா இருக்கும் மொட்டை மாடிக்கு படிகளில் ஏறி சென்ற போது.


"இயற்கை என்னும் இளைய கன்னி...ஏங்குகிறாள் துணையை எண்ணி..." என்ற பாடல் SPB மற்றும் P.சுசீலா பாடிய பாடல் ஒலித்து கொண்டு இருந்தது.


நாங்கள் மொட்டை மடியில் தாத்தா இருக்கும் இடத்திற்கு சென்றபோது தாத்தா சமையல் அறையில் சமையல் சாமான்களை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.


"என்ன தாத்தா இரவு சாப்பாடு சாப்பிட்டு முடிச்சிட்டீங்க போல" என்று கேட்டேன்.


"வாடா பிரதீப் ஒரு 7:00 மணிக்குள்ள சாப்பிட்டு முடிச்சா தான் இரவு ரொம்ப நேரம் இருக்கிற மாதிரி இருக்கும்" என்றார் தாத்தா.


இதுநாள் வரைக்கும் தாத்தா யாருக்கும் தொந்தரவு கொடுத்ததில்லை அவருக்கு தேவையான உணவு மற்றும் அனைத்தும் அவரே தயாரித்துக் கொள்வார்.


"ஏய் கிழவா நீ இவ்ளோ சீக்கிரமா சாப்பிட்டு என்னத்த சாதிக்க போற...? இங்க பாரு நாங்க சரக்கு அடிக்க வந்திருக்கிறோம் பாத்துக்க பாத்துக்க. கிழவா நீ எங்களை போல் இளைஞன இருத்தப்போ நீ வாழ்க்கையை நல்லா என்ஜாய் பண்ணுவே இல்லையா...?" என்றான் ரமேஷ்.


ரமேஷ் சொல்லும் போது தாத்தா சிரித்துக்கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார்.


கிழவா என்று ரமேஷ் தாத்தாவை கூப்பிடும் போது தாத்தா எப்பொழுதும் கோபப்பட்டதே இல்லை அதற்கு மாறாக அவன் பேச்சை ரசிப்பார்.


தாத்தா தங்கி இருந்த மொட்டைமாடி ஒரு சமையலறையும் தாத்தா பொருள்களை வைத்துக்கொள்ளவும் அவர் தூங்குவதற்கு ஒரு கட்டிலை போட்டுக் கொள்ளவும் அதனுடன் அட்டாச்டு பாத்ரூம் மொட்டை மாடியில் மேற்கு பகுதியில் இருந்தது. மொட்டை மடியின் கிழக்கு பகுதியில் 15 க்கு 15 அடி வராண்டா முழுவதுமாக திறந்த வெளியாக காலையில் சூரியனை ரசிக்கவும் இரவில் அண்ணாந்து வானத்தைப் பார்த்தால் நட்சத்திரங்களையும் நிலாவையும் ரசியும்படியாக இருந்தது.


"டேய் பிரதீப் வாடா நாம சரக்கு அடிக்கிற வேலையை பார்ப்போம்" என்று ரமேஷ் மொட்டை மாடியில் திறந்த வெளி வராண்டாவில் பாயை விரித்து அதன் மேல் நாங்கள் வாங்கிக் கொண்டு வந்திருந்த சரக்கு பாட்டில் மற்றும் சாப்பிடுவதற்கான எல்லா ஸ்னாக்ஸ்ம் ரமேஷ் எடுத்து வைத்தான்...


"பீர் பாட்டில் கூலிங் ரொம்ப கம்மியா இருக்குடா, பிரிட்ஜில் வைச்சிட்டு இன்னொரு நாளைக்கு குடிப்போம். இப்ப இந்த ஃபுள் அடிப்போமா...?" என்றான் ரமேஷ்.


சரி என்று சொல்லிவிட்டு இரண்டு பீர் பாட்டிலை நான் எடுத்து பிரிட்ஜுக்குள் வைக்கச் சென்றேன் அப்பொழுது தாத்தா தனக்கே ஊறிய பாணியில் மிகவும் அமைதியாக அமர்ந்து கொண்டு எதையோ ரசித்துக் கொண்டு இருந்தார்.


"டேய் பிரதீப் நீ உன்னோட ஸ்டைல்ல இந்த ஃபுல் பாட்டில வந்து ஓபன் பண்ணி கொடுடா " என்றான் ரமேஷ்.


நான் என்னுடைய ஸ்டைலில் ஃபுல் பாட்டிலை ஓபன் செய்து ரமேஷ் இடம் கொடுத்தேன்.


"டேய் பிரதீப் நீ பாட்டில் ஓபன் பண்றது உன்னோட ஸ்டைலினா நான் சரக்கு மிக்ஸ் பண்றதுல என்னோட ஸ்டைலோ ஸ்டைலுடா..." என்று சொல்லிக் கொண்டே ரமேஷ் இரண்டு பிளாஸ்டிக் கப்பில் அரை இஞ்சி அளவு சரக்கை ஊட்டி விட்டு அதில் மிக்சிங்க்கு ஸ்ப்ரேட்டை ஊற்றிய பிறகு அவன் பாக்கெட்டில் வைத்திருந்த ரெனால்ட் பேனாவை எடுத்து இரண்டு பிளாஸ்டிக் கப்புகளையும் நன்றாக கலக்கி விட்டான்.


"டேய் மச்சி இப்ப சரக்கு ரெடி ஆயிடுச்சு சைடிஷ்க்கு மிச்சர், ஆம்பிலைட், சேவ் எல்லாமே இருக்குதுடா ஆரம்பிப்போமா...?" என்றான் ரமேஷ்.


நாங்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பிளாஸ்டிக் கப்பில் இருந்த சரக்கை எடுத்துக் கொண்டு "cசியர்ஸ்s" சொல்லிவிட்டு ஒரே மூச்சில் நான் குடித்து விட்டேன் ரமேஷ் காபி சாப்பிடுவது போல சிப்பு சிப்பாக சரக்கை குடித்துக் கொண்டிருந்தான்.


பிறகு நான் ஊறுகாயை ஒரு விரலில் தொட்டு என் நாக்கில் வைத்த போது அடி வயிற்றில் இருந்து ஏப்பம் வந்தது பிறகு சரக்கு என் உடம்பில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.


"என்னதான் நாம சரக்கு அடிக்கும்போது பலவிதமான சைடிஸ் இருந்தாலும் இந்த பட்ட ஊறுகாய்க்கு ஈடே இனையே இல்லப்பா...!" என்று ரமேஷ் சொல்லி கொண்டே ஊறுகாயை எடுத்து சுவைத்தான்.


எப்படிடா இருக்கு பஸ்ட் ரவுண்டு மப்பு ஏறிடுச்சா என்று ரமேஷ் நான் கேட்டேன்.


"ம்ம்ம்...ம்ம்...ம் கொஞ்சமா இந்த இத்தானூன்டு" என்று சொல்லிக்கொண்டே ரமேஷ் தன் ஆள்காட்டி விரலின் முதல் கனுவை அளவுக்கு காட்டினான்.


"ரெண்டாவது ரவுண்டு போலாமா...?" என்று நான் ரமேஷிடன் கேட்டேன்.


"மச்சி இப்பவே நாம செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கிடுவோம் இப்ப நான் கலக்குறேன் பாரு எப்படி கலக்குற மட்டும் பாரு..." என்று ரமேஷ் சொல்லிக் கொண்டே மிக்ஸிங் செய்ய ஆரம்பித்தான்.


நான் தாத்தாவை பார்த்தேன் அவர் மிக ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாக தெரிந்தது.


"டேய் பிரதீப் செகண்ட் ரவுண்டுக்கு மிக்சிங் போட்டாச்சு ஆரம்பிக்கலாமா..." ரமேஷ் சொல்லி முடிப்பதற்குள் ரமேஷ் அவனுடைய பங்கை குடித்து முடித்து விட்டான்.


நான் எனது பங்கு உள்ள பிளாஸ்டிக் கப்பில் பாதி அளவு குடித்து வைத்து விட்டிருந்தேன். எனக்கு சிறிதளவு போதை ஏறி இருந்தது.


ரமேஷுக்கு போதை ஏறி தாத்தாவைப் பார்த்து "ஏய் கிழவ நீ அங்க தனியா உக்காந்துட்டு என்ன பண்ணிட்டு இருக்க" என்றான்.


தாத்தாவிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் வரவில்லை.


"ஏய் கிழவ ஏதாவது பேசித்தொலையே... இங்க பாரு நாங்க தண்ணி அடிச்சுகிட்டு எங்களோட கஷ்டத்தை எல்லாம் போகி கிட்டு இருக்கோம்... உன் பேரனுக்கு வந்து லவ் ஃபெயிலியர், போலீஸ் ஆக முடியல... எனக்கு பாரு நான் கல்யாணம் பண்ணி ரெண்டு குழந்தை பெத்துட்டேன் ஆனா எனக்கும் என்னோட பொண்டாட்டிக்கும் தினைக்கும் வாய்க்கால் தகர்தான்..." என்று ரமேஷ் சொல்லிக் கொண்டிருந்தபோது...


"ராசாவே உன்ன காணாத

நெஞ்சு காத்தாடி போலாடுது..." 


ரேடியோவில் பாடல் ஒலித்ததும் ரமேஷ் என்னை பார்த்து ஒரு முறை முறைதான்.


"ரமேஷ் போதையில் இருந்தால் தாத்தாவிடம் சென்று தாத்தா என்னை மன்னிச்சிரு தாத்தா இனிமே நான் உன்னை கிழவன் என்று கூப்பிடவே மாட்டேன் தாத்தா ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க தாத்தா..." என்று ரமேஷ் தாத்தாவிடம் கெஞ்சினான்.


"டேய் பிரதீப் தாத்தாவை பேச சொல்ற..."ரமேஷ் என்னிடம் வந்து கெஞ்சினான்.


நான் மப்பிலிருந்ததால் தாத்தாவின் அருகே சென்று.


"ஏய் தாத்தா நீ எதுக்கு தனியா தங்கி இருக்கிற, பாட்டி அதாவது எங்க அப்பாவோட அம்மா இறந்ததுக்கு அப்புறம் நீ எதுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கல அப்புறம் நீ எதுக்கு போலீஸ்காரன் மாதிரி வெறப்பா இருக்க இப்வே எனக்கு சொல்லு..." என்று நான் என் மனதில் உள்ள சந்தேகங்களை தைரியம் வரவழைத்து தாத்தாவிடம் கேட்டேன்.


"டேய் பிரதீப் இப்ப நீ இருக்கிற நிலைமையில என்னால சொல்ல முடியாதுடா நீ நல்லா தெளிவாகு அதுக்கப்புறம் நான் உன்கிட்ட சொல்றேன்" என்று தாத்தா என்னிடம் கூறினார்.


"தாத்தா நாங்க ஃபுல் மப்புல இருந்தாலும் ஸ்டெடியா இருப்போம் எல்லாத்தையும் கரெக்டா இருப்போம் நீங்க இப்பவே சொல்லுங்க தாத்தா..." என்றான் ரமேஷ்.


தாத்தா என் முகத்தையே பார்த்தார்...


"நான் அவரிடம் தாத்தா எதுக்கு தாத்தா நீங்க வந்து தனியா மொட்டை மாடியில இருக்கிங்க சொல்லுங்க ப்ளீஸ்" என்றேன் நான்.


தாத்தா சேரை விட்டு எழுந்து மொட்டை மாடியின் கிழக்கு பக்கமாக உள்ள காம்பவுண்ட் சுவர் திட்டில் தனது இருகைகளையும் ஊன்டி என்னையும் ரமேசையும் பார்த்தார்.


நாங்கள் இருவரும் அவர் சொல்லப் போவதை கேட்க மிக ஆர்வமாக இருந்ததை அவர் அறிந்தார்.


பிறகு தாத்தா சொல்ல ஆரம்பித்தார்....


நான் சொல்லப் போற என்னோட வாழ்க்கையை பத்தி உங்களுக்கு பிடிக்குதா இல்லையா என்று தெரியாது.ஆனா,  நான் என்னோட வாழ்க்கையில எடுத்த முடிவு எனக்கு சரி என்று பட்டது.  ரொம்ப புடிச்சி இருந்தது அதுல வந்து நான் எந்த ஒரு கவலையும் படல ஆனா அது உங்களுக்கு பிடிக்குமா இல்லையா என்று எனக்கு தெரியாது.


ஒரு மனுசனா பொறந்தவன் தான் எடுக்கிற முடிவுல ஸ்ட்ராங்கா இருக்கணும் அப்பதான் அவன் எந்த ஒரு குற்ற உணர்ச்சி இல்லாமல் அவனுடைய வாழ்க்கை கடைசி வரைக்கும் கெத்தா கொண்டு போக முடியும் அதை என்னோட வாழ்க்கையில நான் பாடம் எடுத்துக்கொண்டேன்.


"தாத்தா இந்த மாதிரி தத்துவங்கள் எல்லாம் வேணாம் தாத்தா நேரா விஷயத்துக்கு வாங்க தாத்தா...நம்ம முன்னோர்களை பத்தி தயவு செய்து சொல்லுங்க தாத்தா...அப்பதான் நான் யாருன்னு எனக்கே தெரியும் தாத்தா ப்ளீஸ்" என்று நான் தாத்தாவிடம் கேட்டேன்.


உங்க அப்பா அம்மா யாரு...? நீங்க எப்படி தேனிக்கு வந்தீங்க அந்த கதையை சொல்லுங்க தாத்தா" ரமேஷ் தாத்தாவிடம் கேட்டான்.


தாத்தா மீண்டும் சொல்ல ஆரம்பித்தார்.


நான் பக்கத்துல இருக்குற போடிநாயக்கனூர்ல பிறந்தேன் என்னோட அப்பா அம்மா ரொம்ப வசதியானவங்க மேலும் அவங்களுக்கு நிறைய விவசாய நிலங்கள் இருந்தது அப்போ எங்க வீட்ல சாப்பாட்டுக்கே பஞ்சம் கிடையாது. எங்க வீட்ல நான் ஒரு பையன் தான்.


எங்க பங்காளிங்க எங்க வீட்டுக்கு சொத்த எப்படியாவது அடையனும் அப்படிங்கறதுக்காக எங்க கூட பழகுனாங்க. என்னோட அப்பா அம்மா பேசிக்காவே படிக்காதவங்க அவங்க கைநாட்டு தான் வைப்பாங்க அப்பதான் இந்திய கவர்மெண்ட் சொத்தை பதிவு செய்கிற ஸ்கீம் உருவாக்கினார்கள்.


அந்த சமயத்துல என்னோட பங்காளிங்க என்னோட அப்பா கிட்ட வந்து உங்க சொத்தை எல்லாம் உங்க பேர்ல பத்திரப்பதிவு பண்ணி கொடுக்கிறோம் என்று  பொறுப்பெடுத்துக்கிட்டாங்க.  


அந்த பங்காளிங்க சதி வேலை செஞ்சு எங்க சொத்தை எல்லாம் அவங்க பேருக்கு மாத்தி வச்சுக்கிட்டு. போலீஸ்காரங்களுக்கு மாமூல் கொடுத்து எங்களை மிரட்ட ஆரம்பிச்சுட்டாங்க.


என்னோட அப்பாவும் அம்மாவும் தாங்க ஏமாந்துட்டோம் அப்படிங்கற நினைப்பிலேயே மனசு நொந்து இறந்தே போயிட்டாங்க. எனக்கு அப்போ விவரம் தெரியாத வயசு அப்ப எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல எனக்கு ரொம்ப ஆறுதலாவும் யாரும் அங்க இல்ல அப்புறம் நான் அங்கிருந்து நடந்தே வந்து தேனிக்கு வந்துட்டேன். அந்த வயசுல நான் வந்து சேர்ந்த இடம் தேனி என்பது கூட எனக்கு தெரியாது.


வந்த முதல் நாள் இந்த ஸ்ரீராம் தியேட்டர் எதுத்தாப்புல இருக்குற ஒரு இடத்துல வந்து படுத்து கிடந்தேன் அப்போ வயிறு ரொம்ப  பசிச்சதுத் எனக்கு யாருமே உதவவில்லை. 


அந்தப் பக்கமா வந்த மீனாட்சி அவ அம்மா வந்தாங்க. நான் பசியால் துடிச்சிட்டு இருக்கறத பார்த்துட்டு மீனாட்சி என்கிட்ட வந்து என்னை பார்த்து நீ யாரு எங்கிருந்து வந்திருக்க அப்படின்னு கேட்டா அப்படியே அந்த மீனாட்சி பார்க்கும்போது மனசுக்குள்ள மீனாட்சி வந்த மாதிரி இருந்தது.


உனக்கு அப்பா அம்மா யாருமே இல்லையா? பசிக்குதா? சாப்டியா? சாப்பாடு வேணுமா? அப்படின்னு ஒரு குழந்தை மனசு மாறியே கேட்டா என் மீனாட்சி.


மீனாட்சி பார்த்த உடனே என்னோட மனசுலக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது. நான் வாழ்வதற்கான தைரியத்தையும் கொடுத்தது அப்பதான் அந்த நிமிஷம்தான்.


உடனே மீனாட்சி அவ அம்மாகிட்ட ஓடிப்போய் அவங்க அம்மா கையில் இருந்த தூக்கு வாலியை பிடிங்கிட்டு ஓடி வந்து என்கிட்ட வந்து. தூக்கு வாலியை திறந்து அதில் இருக்கிற சாப்பாடு எடுத்து சாப்பிட சொன்னா.


அந்த சமயத்துல எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல அந்த தூக்கு வாலியில இருக்கிற சாப்பாடு எடுத்து அள்ளி அள்ளி வயிறார சாப்பிட்டேன்.


"ஏண்டி மீனாட்சி அப்பாவுக்கு கொண்டு போற சாப்பாடு எடுத்து இவனுக்கு குடுத்துட்டு அப்பாவுக்கு என்னடி பண்றது அப்பா ரொம்ப திட்டுவார் டி" என்றால் மீனாட்சியின் அம்மா.


"அம்மா நீ ஒன்னு கவலைப் படாதம்மா நான் அப்பாகிட்ட சொல்லிக்கிறேன் அப்ப கோவிச்சு கூட மாட்டாரு அப்படி" என்று மீனாட்சி எனக்கு ஆறுதலாக பேசினால்.


"டேய் பிரதீப், நாம ரொம்ப பசியா இருக்கும்போது நமக்கு யாரு உதவறவங்களோ அவங்க தாண்டா உண்மையான மனுசங்க அப்பதான் நாம  யார் உண்மையான மனிதர்கள் என்று புரிஞ்சுக்கலாம்" என்று தாத்தா தனது கடந்த கால வாழ்க்கையை பற்றி கூறும்போது இடையில் குறிப்பிட்டார்.


மீனாட்சி கொடுத்த சாப்பாடு சாப்பிட்டு முடிச்சதுக்கு அதுக்கப்புறம் எனக்கு எங்க போறதுன்னே தெரியல நான் அப்படியே மீனாட்சி அவங்க அம்மாவும் நடந்து போறதுக்கு பின்னாடியே நான் நடந்து போயிட்டே இருந்தேன். மீனாட்சி உடைய அம்மா என்னை திரும்பி பார்த்துட்டு பாரு நீ சாப்பாடு கொடுத்த நம்ம பின்னாடியே வந்துட்டு இருக்கான் பாரு அப்படின்னு சொன்னாங்க.


 அவ அம்மா சொன்னதுக்கு அப்புறம் மீனாட்சி திரும்பி என்னை பார்த்து சின்ன சிரிப்பு சிரிச்சா. மீனாட்சி உடைய சிரிப்பை நான் பார்த்ததுக்கு அப்புறம் இந்த உலகத்துல எனக்காக ஒருத்தி இருக்காங்கன்னா அது மீனாட்சியாகத்தான் இருக்க முடியும் தோனிச்சு.   அவங்க வீடு வரைக்கும் அவங்க பின்னாடியே போய் அவங்க வீட்டு வாசலில் நின்னுட்டேன்.


மீனாட்சி வீட்டுக்குள்ள போனதுக்கப்புறம் அவங்க அம்மா திரும்பி என்கிட்ட வந்து தம்பி இங்க பாருப்பா உனக்கு சாப்பாடு கொடுத்தோம் நீ சாப்பிட்டு நீ போய் இருக்க வேண்டியதுதானே எதுக்கு எங்க பின்னாடி எங்க வீட்டு வரைக்கும் வர.  


மீனாட்சி வீட்டுக்குள்ள இருந்து ஜன்னல் வழியா அவ அம்மா பேசுறத கேட்டுட்டு. அம்மா நீ விரட்டாதமா அவர பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு அவருக்கு யாருமே இல்ல போலம்மா அதனால தான் நம்ம பின்னாடியே வந்துட்டாரு போலாமா


அடியே மீனாட்சி எல்லாத்துக்கும் காரணம் நீதாண்டி,  நீ எதுக்குடி சாப்பாடு கொடுத்த, இப்ப பாரு கடைசிலாம வீட்டுக்கு வந்து நிக்கிறான் பாரு அப்படின்னு சொல்லிட்டு அவ அம்மா வீட்டுக்கு உள்ளே சென்றால்.


அம்மா நீ கவலைப்படாதமா நான் பாத்துக்குறேமா, அப்பா வந்தா நான் பேசுகிறோமா, அப்படின்னு வீட்டுக்குள்ள இருந்து மீனாட்சி பேசும் சத்தம் மெதுவாக என் காதில் விழுந்தது.


வீட்டுக்குள் இருந்து மீனாட்சி நான் படுப்பதற்கு பாயும் போர்வையும் தலையையும் கொண்டு வந்து என் கையில் கொடுத்து இந்த திண்ணையில் நீ படுத்துக்க என்று சொல்லிவிட்டு வீடிற்கு உள்ளே சென்றாள்.


நான் அசதியில் அப்படியே தூங்கி விட்டேன். காலையில் நான் எழும்போது  தான் இரவில் அவள் அப்பா வீட்டுக்கு வரும்போது நான் படுத்து தூங்கிட்டு இருப்பதை பார்த்துவிட்டு அவங்க அப்பா யார் இந்த பையன் என்று கேட்டபோது 

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந்தது

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சனிவார்வாடா (Shaniwarwada)-Pune

  நான் புனேக்கு (Pune) எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். எனக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி புனேவை சுற்றி பார்க்க விருப்பமாக இருந்தது. அலுவலகத்தில் பயணத்திற்கான நேரத்தை பெற்று கொண்டு (14.04.2023) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. நான் தங்கி இருக்கும் Hotel விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார்.  பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது.  முதலில் நான் சனிவார்வாடா பயணித்தேன்... இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம். சனிவார்வாடா , மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம