Skip to main content

மகேந்திரன் & வினோத் சதுரகிரி மலை பயணம்

மகேந்திரன் & வினோத்

நான் எனது இந்த இரண்டு நண்பர்களின் அவர்களின் சதுரகிரி பயண அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டபோது...

நான் 2016 ஆண்டில் நான் சதுரகிரி பயணம் சென்றது என்கண்முன்னே வருகிறது... 

இதை படிக்கும் அனைவருக்கும் இங்கு பயணம் செய்தவர்களுக்கும் இனிமேல் பயணம் செய்ய விரும்புவர்களுக்கும் மகேந்திரன் & வினோத் பயணங்கள் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும்...

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் 


சதுரகிரியும் மற்றும் திருவண்ணாமலையும் எத்தனை முறை சென்றாலும்...

ஒவ்வொரு முறையும் அதன்
பிரம்மாண்டத்தை உணர்த்துவதில் தவறியதே இல்லை...

இன்று மகாலிங்க மலையைப் பற்றி நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை.. உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்...




நாங்கள் 07-02-2020 வெள்ளிக்கிழமை இரவு கந்தர்வகோட்டையில் இருந்து மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டை மறுநாள் காலையில் சனிக்கிழமை அடைந்தோம்...

பிறகு அங்கு இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸில் சென்று தாணிப்பாறை விலக்கில் இறங்கினோம் ...

பிறகு ஆட்டோவில் அங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்று சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை அடைந்தோம்...

வாருங்கள் இனி நாம் நம் பயணத்தை துவங்கலாம்...

சதுரகிரி அமைப்பு...

திசைக்கு நான்கு கிரிகள் (மலைகள்) வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை சஞ்சீவி மலை என்கின்றனர். சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.



தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும்...


மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும்...


செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன...





இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன...



இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம்...

சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம்...

அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான்சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு...


இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது...




இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும்...
இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது...



இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள்.




இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது...

இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி...

கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்...



பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து பின் நாங்கள் மலை ஏற துவங்கி னோம் ...


போகும் வழியில் கடவுளை தரிசிக்க குழந்தை கள் முதல் வயதானவர்கள் வரை மகாலிங்க கடவுள் பெயரை செல்லிகொண்டே மலையேறும்போது அந்த பக்திக்கு மிக அதிகமான ஆற்றல் இருப்பதாக உணர்தோம்...


ஓர் இடத்தில் மரத்தில் சித்தர் தரிசனம் கிடைத்த து. அது இயற்கை யாகவே உருவாக்கி இருந்தது...


பிறகு நாங்கள் இறுதியில் மலை உச்சியில் உள்ள மாகலிங்க கோயிலை அடைந்தோம்...



மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை எடுத்து கொண்டுடோம்.

*****நமது வாழ்க்கையில் ஒரு முறையாவது செல்ல வேண்டும்.


Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந...

திருவண்ணாமலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

எனது வாழ்க்கையில் கடினமான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் எனது உடல், மனம் மற்றும் ஆவியை ஒருமுகப்படுத்தி நவ்வாழ்கை வழங்கியவர் என்று எனது இதயத்தில் வாழும் எனது தாய் மற்றும் தந்தை போல் என்னுடன் இருக்கும் இந்த திருவண்ணாமலை உண்ணாமுலையாள் (பார்வதி) மற்றும் அண்ணாமலையார் (சிவன்) நான் பலமுறை திருவண்ணாமலை சென்று இருக்கிறேன். எனது திருமணத்திருக்கு முன்பும், திருமணமாகி எனது மனைவி ஆறு மாத காலம் தாய்மையாக இருந்த போது நாங்கள் திருவண்ணாமலை சென்று தரிசித்து விட்டு நாங்கள் குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பாக வந்து தரிசிக்கிறோம் என்று வேண்டிக்கொண்டோம். அதுபோல எங்கள் மகன் சர்வேஸ்வரன் பிறந்த பிறகு நாங்கள் திருவண்ணாமலை கோவில் சென்று நாங்கள் ஆசிர்வாதம் பெற்று வந்தோம். "நம்பினால் கைவிடமாட்டார் இந்த திருவண்ணாமலையார்". திருவண்ண்னாமலைக்கு பழங்காலம் முதலே ஒரு தொன்ம முக்கியத்துவம் உள்ளது. சங்க காலம் தொட்டு குறிப்பிடப்பட்டுவரும் சில கோயில்களில் அது ஒன்று. நிலவியலில் அடுத்த தடயம் உள்ளது. திருவண்னாமலை  ஒரு எரிமலை. திருவண்ணாமலையில் உள்ள அந்த எரிமலை பல லட்சம் வருடம் பழையது.  அந்த எரிமலை வெடித்து சிதறிய போது தீக்கு...

வெள்ளியங்கிரி மலை பயணம்...

வெள்ளியங்கிரி மலை பயண அனுபவம்தான் எங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த பயணங்கள் செய்ய வழிவகுத்தது... நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த வெள்ளியங்கிரி மலை பயணம் செய்ய வேண்டும்... இந்த பூமிப் பிரபஞ்சத்தில் மிகச் சிறந்ததும், புண்ணிய பூமியுமான நம் பாரத தேசம், மிகப் பழமையானதும், சக்திவாய்ந்ததும் ஆகும். எண்ணற்ற மகான்கள் மற்றும் சித்தர்கள் மலைவாழிடங்களில் தங்களின் சக்தியாலும், தவத்தாலும் கணக்கற்ற மலைகளில் கோவில்களும், ஆன்மீக மடங்களும், பீடங்களும் நிறுவி இருக்கின்றார்கள். அங்கு நாம் செல்வதின் மூலம், நாம் நமது மனம், உடல் மற்றும் ஆன்மாவை வலுப்படுத்திக் கொள்ள முடியும். சில இடங்களில் இறைவனே சுயம்புவாக வந்து குடியேறியும் உள்ளார். அப்படி எல்லாம் வல்ல ஈசனாகிய சிவபெருமான் வந்து குடியேறிய இடம் தான் நாம் பார்க்கும் தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை திருத்தலம். கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு வழிபாட்டுத்தலம். ஏழு மலை கடந்து உச்சிக்கு சென்றால் நாம் தரிசிப்பது ஒரு சுயம்பு சிவலிங்கம். ஈஷா யோகா மையம் மற்றும் தியானலிங்கம் இருப்பதும் வெள்ளியங்கிரி...