Skip to main content

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும்.

வினோத், நான் மற்றும் பாலா ....


நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்...

மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்...

வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்...

இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்...

அதே நேரத்தில் பெங்களூர் இருந்தது குக்கிக்கு  பாலமுருகன் தனியார் பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருப்பதாக cell phone-ல் அழைத்து கூறினான்...


அதிகாலை 5மணி க்கு மங்களூர் பேருந்து நிலை யத்தில் இருந்தது குக்கிக்கு நானும் வினோத்தும் பயணித்தோம்....

முன்ஏற்படாக பாலா நாங்கள் ஓய்வு எடுபதர்க்கு வசதியாக அறை முன்பதிவு செய்திருந்தான். இரவு பயணம் செய்தமயால் சிறிது நேரம் ஓய்வில் இருந்து விட்டு நாங்கள் எங்கள் பயணத்தை துவங்கினோம்...

முதலில் நாங்கள் குக்கி சுப்பிரமணிய சுவாமி கோவில் சாமி தரிசனம் செய்ய முடிவுசெய்தோம்...

மற்றும் இந்த கோவிலின் வரலாறு இங்குள்ள மக்கள் இக்கோயிலை குக்கி சுப்பிரமணியசுவாமி கோயில் என்று அழைக்கின்றனர்...

இக்கோயிலின் மூலவரான முருகனை அனைத்து நாகர்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர்...

புராணக்கதைப்படி, கருடனுக்கு அஞ்சிய நாகர்களின் (பாம்புகளின்) குலத்திற்கு தலைவியான வாசுகி உட்பட அனைத்து நாகர்கள் இவ்விடத்தில் குடிகொண்டுள்ள சுப்பிரமணியசுவாமியைப் புகலிடமாகக் கொண்டுள்ளனர்...

இந்த கோவில் வழிபாடுகள் அனைத்தும் கேரள கோவில் போல் இருக்கும்...

கோவில் தரிசனத்தை முடித்துவிட்டு காலை 11 மணிக்கு அருகில் உள்ள உணவகத்தில் காலை உணவாக பூரி, தோசை மற்றும் காபி சாப்பிட்டோம்...

மேலும் நாங்கள் கோவில் பின்புறம் உள்ள குமரபர்வதம் மலை Trekking  செல்ல இருப்பதால்  அங்கு பட்டர்மேன் என்னும் இடத்தில் தான் உணவு கிடைக்கும். ஆகவே fruits, snacks and water battle. இங்கே வாங்கி கொண்டோம்...

கோவில் இருக்கும் இடத்தில் இருந்து 1km  நடந்தால் குமரபர்வதம் மலை அடிவாரதை அடையலாம்...

மலை ஏறுவதர்க்கு தேவையான trekking stick, shoe, குளிரை சமாளிக்க sweater, உப்பு & மூக்கு பொடி (அட்டை பூச்சி அதிகமாக இருப்பதால் அதை சமாளிக்க) & toruch lights...

இரவு நாங்கள் மலையில் தங்க இருப்பதால்.மலையில் தங்குவதர்க்கு தூங்க வசதிகள் எதுவும் கிடையாது மேலும் குளிர் பணி அதிகமாக இருக்கும். எனவே நாங்கள் மூன்று பேரும் இரவில் தங்குவதர்க்கு ஒருநாள் வாடகையாக ரூபாய் 500 க்கு ஒரு tent  வாங்கினோம்...


2.5kg அளவு உள்ள tent எப்படி போர்த்த வேண்டும் என்று Demo செய்து காண்பித்தார்கள்...

மோலும் 4மணி நேரம் மலையேறிய பிறகு பட்டர்மேன் அருகில் Forest office அருகில் தான் இரவு tent போட்டு தூங்க முடியும். மீண்டும் காலை நமது அனைத்து logguage -ஐ Forest office ல் ஒப்படைத்து விட்டு மீண்டும் மலை ஏறவேண்டும்...

நாங்கள் எங்கள் பயணதிட்டத்தை கிழே உள்ள வரைபடத்திற்கு ஏற்றார்போல் வடிவமைத்து கொண்டோம்...
இறுதியாக நாங்கள் குமரபர்வதம் மலைஅடிவாரத்தில் இருந்து நாங்கள் மலை ஏற துவங்கி னோம்...


சரியாக மதியம் 1மணிக்கு மலையேர துவங்கினோம். ஏன் என்றால் முதல் மலையை 4மணிநேரத்தில் ஏறுவதர்க்கு திட்டம் திட்டினோம்...

மேலும் காலை 11 மணி க்கு பிறகு இந்த முதல் மலையை கடந்தபின்புவரும் Forst office-ல் மேலும் மலை ஏற அனுமதிக்க மாட்டார்கள்...

எனவே நாங்கள் மாலை 5 மணிக்குள் பட்டர்மேன் வீடுக்கு அருகில் உள்ள Forest officeஐ அடைய விரும்பினோம்...

அடர்ந்த காட்டுக்குள் செல்லும் போது மூலிகை வாசனையும், பறவைகளின் ஒலியும், குரங்குகளின் சேட்டையும் மற்றும் தென்றல் காற்றுயும் அனுபவித்து இந்த அடர்த்தி யான காட்டுக்குள் மனிதர்கள் நாங்கள் மட்டுமே இருப்பதாக உணர்ந்தோம்...


சில மணி நேரம் மலை ஏறிய பிறகு ஒரு சிறிய நீர் வீழ்சியை அடைந்தோம்.அங்கு நீர் குடிப்பதர்க்கு சுவையாகவும் மூலிகை மணமும் நிறைந்ததாக இருந்தது.அங்கு குளிப்பதற்கு வாசதியாகவும் இருந்ததால் குளித்துவிட்டு மீண்டும் மலை ஏற துவங்கினோம்...



பிறகு இரவு வருவதர்க்குள் பட்டர்மேன் வீட்டை அடைய நினைத்து நாங்கள் மலை ஏறுவதை  துரிதபடுத்தினோம்...

இந்த மலை ஏறுவது மிகமிக கடுமையானதாக இருந்தது. மேலும் செங்குத்தாகவும் கரடுமுரடானதாக இருந்தது..



அய்யோ...
அம்மா...
கொக்கமக்க...
என்ன கொடுமடா மலை இது...
என்று புலம்பிகொண்டு சூரியன் மறைவதர்குள் பட்டர்மேன் வீட்க்கு அருகில் வந்து.நாங்கள் ஒரு சில photo எடுத்து கொண்டோம்...


ஒருவழியாக தட்டு தடுமாறி பட்டர்மேன் வீட்டை அடைந்து வயிறு நிறைய நன்றாக சாப்பிட்டோம்...



இங்குள்ள பட்டர்மேன் பரம்பரை பரம்பரையாக இங்கே இருந்து இயற்கை யாக வாழ்ந்து எங்களைபோல் வருபவர் களுக்கு உணவு வழங்குவார்கள்...

ஒரு சாப்பாடு 120 ரூபாய். நாங்கள் 1000 ரூபாய் இருந்தாலும் கொடுத்து இருப்போம் ஏனெனில் அந்த உணவு அறுசுவை யாகவும் என்களின் தீராத பசியையும் போக்கியது...


பசி தீர்ந்த மயக்கமும் மாலை இளம்சூரியன் மனதிற்கு அனைத்து வலியை போக்கி தூக்கம் வரவழைத்து tent போட்டு இரவு தூங்க சென்றோம்...

மறுநாள் காலை 4மணிக்கு forest office ல் ஒருவர்க்கு Rs.350  செலுத்தி நமது luggage கொடுத்து விட்டு எந்தனை plastic பொருள் எடுத்து கொண்டு செல்கிறோம் என்பதை கூறிவிட்டு மீண்டும் மலை ஏற செல்ல வேண்டும். ஏனெனில் plastic மற்றும் குப்பை மலையில் நாம் போடுவதர்க்கு அனுமதி இல்லை...



அதிகாலை இரவில் troch light  உதவியுடன் குறுகலான கரடு முரடான பாதையில் கல்மண்டபத்தை நோக்கி பயணித்தோம்...

இந்த பயணத்தின்போது குளிரிம் குளிர் காற்றும் முதுகு தண்டு வழியாக உச்சந்தலையில் ஏறி இமயமலையில் இருப்பது போல் உணரசெய்தது...

இந்த கல்மண்டபம் அருகில் ஒரு சிறு நீர் ஓடை உள்ளது.இங்கு நமக்கு தேவையான நீரை bottle ல் பிடித்த கொள்ள வேண்டும்...

ஒருவேளை நாம் தண்ணீர் பிடிக்காமலோ அல்லது தண்ணீர் இல்லாமல் மலை ஏறினால்.தண்ணீர் தாகம் எடுத்து நாக்கு தொங்கி விடும்...


ஒருவழியாக தட்டு தடுமாறி நாங்கள் அடுத்த மலையை அடைந்தோம்...

அவ்வளவு தண்ணீர் தாகமும் பசியும் சேர்த்து கொண்டு மயக்கம் அடையசெய்தது...

நான் எந்த விளக்கெண்ணடா இவ்வளவு தூரம் trekking கண்டு பிச்சாண்டா... ஜயோ என்னால இந்த மலையில் ஏறமுடியிலயே என்று திட்டிகொண்டே எப்படியாவது இந்த மலையில என்னா இருக்குன்னு தெறிஞ்சிக்கனூம் மனச ஒரு திடமவச்சு மேலூம் மலையேரினேன்...






ஒருவழியாக நாங்கள் எங்கள் இலக்கை அடைந்ததும் உற்சாகத்தில் துள்ளி குதித்தோம் ஆனந்தம் அடைந்தோம்...

கடைசி இலக்காக இந்த இடத்தை அடையவேண்டும்...

மறுபடியும் எப்படி மேலே ஏறி வந்ததோமோ அதேபோல் கிழே இறங்க வேண்டியதுதான்...!!!!!!!!

*****இந்த பயணம் கடுமயாக இருந்தாலும். இப்போது மீண்டும் ஒருமுறை செல்ல செல்ல நினைக்கிறோம். இந்த நினைவுகள் எங்களின் வாழ்நாளில் மறக்வே மறக்காது.


Comments

Popular posts from this blog

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சனிவார்வாடா (Shaniwarwada)-Pune

  நான் புனேக்கு (Pune) எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். எனக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி புனேவை சுற்றி பார்க்க விருப்பமாக இருந்தது. அலுவலகத்தில் பயணத்திற்கான நேரத்தை பெற்று கொண்டு (14.04.2023) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. நான் தங்கி இருக்கும் Hotel விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார்.  பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது.  முதலில் நான் சனிவார்வாடா பயணித்தேன்... இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம். சனிவார்வாடா , மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம