Skip to main content

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்

மிக சாதாரண மனிதன் தன் இதயத்தில் ஏழுமலையானை பக்தியோடு வழிபட்டால். அவருடைய தரிசனம் பிரமிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் .

இந்த பதிவில் எங்களுக்கு கிடைத்த திருப்பதி ஏழுமலையான் தரிசனமும் மற்றும் எங்கள் பயண அனுபவங்கள் பற்றி கூற உள்ளோம்.

நாங்கள் 13 செப்டம்பர் 2019 அன்று திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை பெற்றோம்.

நாங்கள் இந்த தரிசனம் பெற கிட்டத்தட்ட ஆறு மாத காலம் ஏழுமலையானை எங்கள் இதயத்தில் வைத்து பிரார்த்தனை செய்து வந்தோம். 

நாங்கள் குடும்பத்துடன் சென்று வழிபட்டு வந்தோம்.

ஏன் நாங்கள் ஆறுமாதம் முன்பே இந்த பயணத்தை பற்றி திட்டங்களை வகுத்தோம் என்றால்.

சிறு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வருவதால் அவர்களுக்கு எந்தவித சிரமம் இல்லாமல் இருக்க.

நாங்கள் எங்கள் தரிசன Ticket_ஜ மூன்று மாதங்களுக்கு முன்பு திருப்பதி online-ல் பதிவு செய்து கொண்டோம். 

ஒருவேளை தாமதம் ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு online ticket கிடைப்பது கடினமான ஒன்று.

எங்களுடைய அதிர்ஷ்டம் எங்கள் எல்லோர்க்கும் Ticket கிடைத்து விட்டது.


அதேசமயம் எங்கள் அதிர்ஷ்டம் நாங்கள் திருப்பதி மலையில் தங்குவதற்க்கும் online_ல் Ticket கிடைத்தது மிகவும் எங்களுக்கு உற்சாகம் அளித்தது.

பிறகு இதன் அடிப்படையில் நாங்கள் சென்று வர பயண Ticket_ஐ முன் பதிவு செய்து கொண்டோம்.

நான் குடுபத்துடன் சென்னையில் அம்பத்தூரில் வசித்து கொண்டு இருந்தேன்.


தஞ்சாவூரில் இருந்து வினோத் தனது குடும்பத்துடன் 11_செப்டம்பர்_2019 இரவு 9:35 க்கு Uzhavan express train கிளம்பி விடிய காலை 4:25க்கு சென்னை Egmore இரயில் நிலையம் வந்தடைந்தார்கள்.

முன் ஏற்படாக நான் அவர்களை வரவேற்புக்கா நான் Egmore இரயில் நிலையத்தில் காத்திருந்தேன்.

சரியான நேரத்தில் இரயில் வந்தடைந்தது பிறகு நான் அவர்களை OLA car மூலம் நான் அம்பத்தூர் அழைத்து வந்தேன்.

அதற்கு முன்பு எங்கள் குடும்ப உறுப்பினர் திரு. சண்முகம் அண்ணன் வந்து சந்தித்தார். அவருடன் காபி அருந்திவிட்டு அம்பத்தூர் புறப்பட்டோம்.

பிறகு வீட்டில் எல்லோரும் சேர்ந்து பயணத்திற்க்கு தேவையான உணவு வகைகளை குழந்தைகளுக்கும் சேர்த்து தயாரித்தார்கள்.



அதேசமயத்தில் விவேக் திருப்பூரில் இருந்து சென்னை Egmore வந்தடைந்தான்.

பிறகு நான் விவேக்கை அழைத்து வர மீண்டும் நான் Egmore இரயில நிலையம் சென்று எனது Bike-ல் அம்பத்தூர் அழைத்துவந்தேன்.

நாங்கள் காலை உணவை சாப்பிட பிறகு பயணத்திற்க்கு தேவையான உணவை Parcel செய்தார்கள்.

பிறகு நாங்கள் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்க்கு தேவையான தரிசன Ticket, ஆதார் அட்டை மற்றும் தரிசன பணத்தை நான் வினோத் மற்றும் விவேக்கிடம் பெற்று கொண்டேன்.

மேலும் குழந்தைகளுக்கும் மற்றும் பயணத்திற்க்கு தேவையான அனைத்து பொருள்களையும் எடுத்து கொண்டோம்.

சரியாக காலை 10 மணி அளவில் நாங்கள் அனைவரும் அதவது இரண்டு Auto_க்கள் மூலமாக சென்னை அம்பத்தூர் இரயில் நிலையம் வந்தடைந்தோம்.

அம்பத்தூரில் இருந்து Chennai Central இரயில் நிலையத்திற்க்கு Electric train மூலமாக வந்தடைந்தோம்.





நாங்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்க்கு முன்பாகவே Chennai central இரயில் நிலையம் வந்து விட்டோம்.

நாங்கள் செல்ல வேண்டிய Mumbai express Train (Chennai mail)மூலமாக ரேணிகுண்டா இறங்கி அங்கு இருந்த அலமேலு மங்கை பத்மாவதி அம்மன் கோவில் செல்ல திட்டம்.



சரியாக மதியம்12:20 மணிக்கு நாங்கள் எங்கள் பயணத்தை Mumbai express_ல் துவங்கி அதேநாள் சரியாக மதியம்3_மணிக்கு ரேணிகுண்டா வந்தடைந்தோம். 

இந்த இரயில் பயணத்தின்போது நாங்கள் கொண்டு வந்த உணவை சாபிட்டோம் மேலும் அங்கு விற்று வந்த பொறியையும் வாங்கி சாபிட்டோம்.

பிறகு நாங்கள் ரேணிகுண்டாவில் இருந்து அலமேலுமங்கை கோவில்க்கு Auto மூலமாக வந்தடைந்தோம்.







நாங்கள் கொண்டு வந்த பொருட்களை கோவில் வெளியில் உள்ள Locker_ல் வைத்துவிட்டு ஒருவருக்கு ரூபாய்100 தரிசன Ticket_ஐ பெற்று கொண்டு அலமேலுமங்கை அம்மனை சிறப்பாக வழிபட்டோம்.

பிறகு நாங்கள் வாங்கிய Ticket_க்கு லட்டு கொடுத்தார்கள்.

சுட சுட நெய்வாசனையும் மற்றும் திதிப்பும சாபிட சுவையாக இருந்தது.

பிறகு நாங்கள் அலமேலுமங்கை அம்மனிடம் சிறப்பான தரிசனத்தையும் மற்றும் Locker_ல் உள்ள எங்கள் அனைத்து பொருள்களையும் பெற்று கொண்டு பேருந்து மூலியமாக திருப்பதி பேருந்து நிலையத்தை வந்தடைந்தோம்.

பிறகு திருப்பதி தேவஸ்தான பேருந்து மூலியமாக திருப்பதி ஏழுமலையான் நோக்கி எங்கள் பயணத்தை தொடர்தோம்.

இந்த பேருந்து இரவு பயணத்தில் முலு நிலவு வெளிச்சமும், வலைந்து வலைந்து செல்லும் மலை பாதையும் மற்றும் குளிர் காற்றும் எங்கள் அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தை அளித்தது.


சரியாக இரவு 8:30 மணிக்கு நாங்கள் திருப்பதி மலையை அடைந்தோம்.

பிறகு நாங்கள் ஏற்கனவே Online-ல் தங்குவதர்க்கு பதிவு செய்து வைத்திருந்த Receipt-ஐ வைத்து அதனை அலுவலகத்தில் காண்பித்து நாங்கள் தங்குவதற்கு வராஹி சாமி Gusset House_ஜ தேர்வு செய்தோம்.

எங்கள் எல்லா பொருட்களை விடுதியில் வைத்து விட்டு அருகில் உள்ள Hotel _லில் இரவு உணவை சாப்பிட்டோம். 





















பிறகு இரவு இரண்டு மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலை சுற்றி பார்த்து photo எடுத்து கொண்டோம்.

மீண்டும் விடுதி சென்று இரவு தூங்கி விட்டு மீண்டும் அதிகாலை 5 மணிக்கு மொட்டை அடிக்கும் இடத்திற்கு சென்று நாங்கள் மொட்டை ஆடித்தோம்.


















பிறகு எல்லோரும் Readyயாகி குளத்திற்கு அருகில் உள்ள வராஹி சாமி சன்னதி சென்று தரிசனம் பெற்று விட்டு அருகில் உள்ள குளம் மற்றும் நாகர் கோவில் தரிசனத்தை பெற்றோம்.

எங்களுக்கு நிறைய நேரம் கிடைத்ததாலா மிண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் அதன் முன் பகுதியில் உள்ள மைதானத்தை சுற்றி வந்தோம்.

இந்த மைதானத்தில் பிரம்மஉட்சவ நேரத்தில் பற்பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பிறகு நாங்கள் காலை உணவு அருகில் உள்ள Hotel_லில் சாப்பிட்டோம்.

பிறகு சரியாக காலை 10 மணிக்கு எங்கள் அனைவருடைய திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திருக்கு தேவையான Ticket மற்றும் அடையாள அட்டை எடுத்து கொண்டு நாங்கள் பதிவு செய்த 300ரூபாய் வரிசையில் சென்று மிகவும் சிறப்பான என்றும் எங்கள் வாழ்வில் மறக்க முடியாத திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை பெற்றோம்.

தரிசனத்தை முடித்த பிறகு நாங்கள் லட்டு Counter சென்று எங்கள் Ticket- ஜ வைத்து எங்களுக்கான லட்டை வாங்கி கொண்டு நேராக அன்னதானம் நிலையம் சென்று அனைவரும் அன்னதானம் சாப்பிட்டோம்.

அன்னதானம் சாபாடு, சாம்பார், ரசம், மோர் மற்றும் இரண்டு வகையான கூட்டு பொறியல் மிகவும் அருமையாகவும் மன நிறையோடு வயிறார சாபிட்டோம்.

பிறகு ஒரு மணிநேரம் விடுதியில் ஓய்வு எடுத்து கொண்ட பிறகு நாங்கள் அனைவரும் தனியாக ஒரு வாடகை கார் மூலம் திருப்பதி மலையில் இருந்து திருப்பதி இரயில் நிலையம் அடைந்தோம்.

பிறகு மாலை 6 மணிக்கு திருப்பதி to சென்னை செல்லும் இரயிலில் ஏறி இரவு 9மணிக்கு எங்கள் திருப்பதி பயணத்தை சிறப்பாக முடித்துவிட்டு அம்பத்தூரில் உள்ள எங்கள் வீட்டுக்கு அனைவரும் வந்தடைந்தோம்.

*****இந்த கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு எங்களை போன்று நீங்களும் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை பெற வேண்டும்.

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந்தது

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சனிவார்வாடா (Shaniwarwada)-Pune

  நான் புனேக்கு (Pune) எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். எனக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி புனேவை சுற்றி பார்க்க விருப்பமாக இருந்தது. அலுவலகத்தில் பயணத்திற்கான நேரத்தை பெற்று கொண்டு (14.04.2023) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. நான் தங்கி இருக்கும் Hotel விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார்.  பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது.  முதலில் நான் சனிவார்வாடா பயணித்தேன்... இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம். சனிவார்வாடா , மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம