Skip to main content

Posts

Showing posts from 2022

விநாயகர் சதுர்த்தி

நம்மில் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்த கடவுளாக பிள்ளையார் திகழ்கிறார். சிறு வயதில், பிள்ளைகள் சேர்ந்து விளையாடும் போது, பலரும் விநாயகர் சதுர்த்தி வரும் போது அவர்களே களிமண்ணால் பிள்ளையார் செய்து அதை அலங்கரித்து, வணங்குவது, ஊர்வலமாக எடுத்துச் செல்வது என விளையாடி மகிழ்வது வழக்கம். மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப்பெருமான் தெய்வங்களில் முதல்வராக விளங்குகிறார். இவரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவர்.  எந்த சுபவிஷயத்தை செய்யத் தொடங்கினாலும், பிள்ளையாருக்கு சிதறுகாய் போட்டு... அப்பனே! விநாயகனே! தொடங்கும் செயல் தடையேதும் இல்லாமல் இனிதே நிறைவேற்றி அருள்வாய்! என்று வணங்கிவிட்டே செயல்படுவர்.  எழுதத் தொடங்கினாலும், பிள்ளையார்சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு’ என்று குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்கள் வழிகாட்டுவர்.  விநாயகரும் சிறந்த எழுத்தாளராகப் பணியாற்றி இருக்கிறார். தன் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கி வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதியவர் விநாயகர். சதுர்த்தி நாளில் வணங்குவோருக்கு விநாயகப் பெருமானின் அருளால் செல்வாக்கும், சொல்வாக்கும் உண்டாகும். விநாயகர் சதுர்த்தி அன்று மிக உற்ச

சோமநாதர் கோயில்

சோமநாதர் கோயில் என்பது ஒரு சிவன் கோவில் ஆகும். இந்தியாவின் குஜராத்து மாநிலத்தின் தென்மேற்குக் கரையில், கிர்சோம்நாத் மாவட்டத்தில், பிரபாச பட்டினக் கடற்கரையில் இந்த சோமநாதபுரம் சிவன் கோயில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது இந்த சோமநாதர் கோவில் ஆகும். இங்கு சோதிர் லிங்கத்தின் நேர் பின்புறம் உள்ள சக்தி அம்மன், 51 சக்தி பீடங்களில் தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த சக்தி பீடத்திற்குரியதாகும். இஸ்லாமிய படையெடுப்பின் போது 6 முறை இடிக்கப்பட்டது ஆனால் அந்த சர்வேஸ்வரன் அருளால் மீண்டும் மீண்டும் எழுப்பபட்டது.