Skip to main content

Beski Boys

தேர்ந்தெடுக்கும் நிறம் உன் குணம் காட்டும். 

ஆனால், 

நீ தேர்ந்தெடுக்கும் நட்போ உன்னையே காட்டும். 


உன்னை யாரென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? உன் நண்பனை அடையாளம் காட்டு என்பார்கள். 

அந்தளவு நட்பு புனிதமானது... 

வலிமையானது... 

ஆத்மார்த்தமானது... 

மழை நீர் போல இயற்கையிலேயே சுத்தமானது...


பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பின்
வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிப்பது நண்பர்கள் மட்டும் தான்...
வீட்டுக்கு எல்லை உண்டு, ஊருக்கு எல்லை உண்டு,
நாட்டுக்கு எல்லை உண்டு, ஆனால் நட்புக்கு எல்லையே கிடையாது.
ஒரே பள்ளியில் படித்தவர்கள், ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், ஒரே பேருந்து, ஒரே ரயிலில் பயணம் செய்பவர்கள், ஒரே உணவகத்தில் சாப்பிடுபவர்கள், ஒரே டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருப்பவர்கள், ஒரே அறையில் தங்குபவர்கள் என பல்வேறு நிலைகளில் நட்பு உருவாகலாம். 
''கண்கள் அழுதால் துடைப்பது கைத்துண்டு, இருதயம் அழுதால் துடைப்பது நட்பு,'' அந்தளவு நட்பு உயர்வானது. போற்றப்படக்கூடியது.
நட்பு உணவை போன்றது. இந்த வகை நட்பு எப்போதும் தேவை. 
நட்பு நோய் தீர்க்கும் மருந்தினை போன்றது. இந்த வகை நட்பு எப்போதும் தேவை. 
நட்பு இதயம் போன்றது அது அன்புடன் துடித்து கொண்டே இருக்கும். இந்த வகை நட்பு எப்போதும் தேவை. 
சாக்ரடீஸ் ஒரு வீட்டை கட்டிக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த ஒருவர், 'ஐயா! நீங்கள் ஏன் மிகச்சிறிய வீட்டை கட்டி கொண்டிருக்கிறீர்கள், இது உங்களுக்குப் போதுமா?' என்று கேட்டார். 
உடனே தத்துவ அறிஞர் சாக்ரடீஸ், இந்த சிறிய வீட்டை நிரப்புவதற்கு உண்மையான நண்பர்கள் கிடைப்பார்களா எனத் தெரியவில்லை என்றாராம்.
''நீ உலகின் அதிபதியா இருப்பினும் ஒரு நண்பன் இல்லாவிடில் ஏழை தான்,'' என யங் என்ற அறிஞர் கூறுகிறார்.
''நட்புக்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம்?,''

''நட்பு உயிரை கொடுக்கும், காதல் உயிரை எடுக்கும்,'' 
''நட்பு என்பது நோட்டு போன்றது யார் வேண்டுமானாலும் கையெழுத்து போடலாம். ஆனால் காதல் என்பது செக்புக் போன்றது. அக்கவுண்ட் உள்ளவங்க மட்டும் தான் கையெழுத்து போட முடியும்,'' 
பள்ளியிலோ அல்லது கல்லுாரியிலோ, மதிய உணவு இடைவெளியில் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது அவரவர் வீட்டு உணவுகள் அடுத்தவர் தட்டுக்கு பரிமாறப்படும். அங்கே பரிமாறப்படுவது உணவுகள் மட்டுமல்ல, இருதயங்களும் தான். 
பொதுவாக வேறுபாடுகளை களையும் விஸ்வரூப விருட்சம் தான் நட்பு.
நட்பு என்னும் நல்ல உறவு
பொதுவாக மனித உறவுகளை நான்காகப் பிரிப்பார்கள். முதல் உறவு 'பெற்றோர் உறவு'. இரண்டாவது உறவு 'உடன் பிறந்தவர்கள்'. மூன்றாவது உறவு 'கட்டிய மனைவி'. நான்காவது உறவு பெற்ற 'பிள்ளைகள்'. இவை அனைத்தும் பிறப்பால் வருவது. இளமை காலத்தில் சிலருக்கு வருவது காதல் எனும் உறவு. இது திருமணம் வரை நீடிக்கலாம் அல்லது கானல் நீர் போல் காணாமல் போகலாம். ஆனால் குழந்தைப் பருவத்தில் நினைவு தெரியும் நாட்களில் தொடங்கி நினைவு விடை பெறும் காலம் வரை நீடித்து நிலைத்து நிற்பது நட்பு என்னும் உறவு மட்டும் தான். 
நண்பர்கள் மாறலாம். ஆனால் நட்பு மாறாதது.
பறவைக்கு கூடு...

சிலந்திக்கு வலை...

மாட்டுக்குத் தொழுவம்...

மனிதனுக்கு நட்பு...!
மனிதன் தங்குவது இருதயம் கலந்த ஆழமான நட்பில் மட்டும் தான்.
''நட்பு என்பது மின் விசிறியல்ல. இயற்கை காற்று, அதற்கு மின் தடையே வராது''.
நட்பும் ஆறுதலும் எப்படி இரவு பகலை பிரிக்க முடியாதோ; இன்பம் துன்பத்தைப் பிரிக்க முடியாதோ; அதுபோல மனிதனிடமிருந்து பிரச்னைகளை பிரிக்க முடியாது. ''பிரச்னைகள் இல்லாதவன் வாழத் தெரியாதவன்,'' என அன்னிபெசன்ட் அம்மையார் கூறுவார். 
என்ன தான் நமக்கு பிரச்னை என்றாலும், அதை மனதுக்குள்ளே பூட்டி வைத்தால், அது நம்மை நோய் பாதிப்புக்கும் கொண்டு போய் விட்டு விடும். 
ஏனெனில் தாய், தந்தையிடம் பேச அளவு உண்டு. உறவினர்களிடம் பேச அளவு உண்டு. காதலியிடம் பேச அளவு உண்டு. ஆனால் இருதயத்தின் ஆழத்தில் உள்ள உண்மைகளை ஒளிக்காமல் ஒருவன் பேசுவது தன் நண்பனிடம் மட்டும் தான்.
நண்பனிடம் நம் பிரச்னைகளை சொல்லும்போது, அவன் நமக்குத்தரும் இனிமையான ஆறுதல் மூலம் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. துன்பம் பாதியாக குறைகிறது. ''நுாறு மருத்துவர்கள் செய்ய முடியாத சிகிச்சையை, ஒரு நண்பன் தரும் 'ஆறுதல்' செய்யும்''.
பழைய திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்...''கொண்டு வந்தால் தந்தைகொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்சீர் கொண்டு வந்தால் சகோதரிகொலையும் செய்வாள் பத்தினிஉயிர் காப்பான் தோழன்''ஆபத்து என்று வந்து விட்டால் தன் உயிரை கொடுத்தாவது நண்பன் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று போராடுவது நட்பு. அதனால் தான் நட்பை ஒரு சக்தி வாய்ந்த மருந்து என்றார்கள்.
நட்பும் திருக்குறளும் திருக்குறளில் நட்பின் மேன்மையை திருவள்ளுவரும், நட்பு, நட்பு ஆராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களில் அருமையாக விளக்குகிறார். நட்பு என்பது முகம் பார்த்து பழகுவதல்ல. அது இருதயம் கலந்து பழகுவது. உதட்டிலிருந்து பேசும் பேச்சுக்களால் நீடிப்பதல்ல, உள்ளத்தில் இருந்து வரும் ஆழமான வார்த்தைகளால் நீடிப்பது.
ஒரு புதுக்கவிதை சொன்னது...புன்னகை என்ற முகவரிஉங்களிடம் இருந்தால்நண்பர்கள் என்ற கடிதம்வந்து கொண்டே இருக்கும் என்று.இன்னுமொரு குறளில்...
''உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு''இடுப்பில் கட்டியிருந்த ஆடையானது நழுவும் போது எப்படி இரண்டு கைகளும் உடனடியாக ஆடையை இறுகப் பற்றுகின்றனவோ, அதுபோல நண்பனுக்கு துன்பம் வந்தால் தொலைவில் நின்று வேடிக்கை பார்க்காமல் உடனே உதவக்கூடியது நட்பு.
நல்ல நட்பு வளர்பிறை போன்றது. அது நாளுக்கு நாள் வளரும். 
***** நல்ல நட்பை நேசிப்போம்...! 
நல்ல நட்பை வாசிப்போம்...!நல்ல நட்பையே சுவாசிப்போம்...!

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந்தது

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சனிவார்வாடா (Shaniwarwada)-Pune

  நான் புனேக்கு (Pune) எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். எனக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி புனேவை சுற்றி பார்க்க விருப்பமாக இருந்தது. அலுவலகத்தில் பயணத்திற்கான நேரத்தை பெற்று கொண்டு (14.04.2023) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. நான் தங்கி இருக்கும் Hotel விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார்.  பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது.  முதலில் நான் சனிவார்வாடா பயணித்தேன்... இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம். சனிவார்வாடா , மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம