Skip to main content

Posts

Showing posts from November, 2020

எனது வலிகள்

ஒவ்வொரு கணமும் அழிவை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது இந்த பிரபஞ்சம்... வலி என்பது அழிவை நாம் அறியும் ஒரு விதம்... மெல்லமெல்ல சீராக ஒலிக்கும் அழிவின் மந்திரம் அது... வலியை ஒரு தாளம்போல கவனித்தபடிக் கிடக்க வேண்டும்... வலி என்று நாம் சொல்வது நம் மனம் உணரும் ஒரு பொறுக்க முடியாத நிலையே...  அந்த நிலை உடல் உறுப்பில் இருந்து மனதுக்கு செல்கிறது...  வலி மனிதர்களை அவர்கள் தங்களைப்பற்றி கொண்டிருக்கும் கற்பனைகளை எல்லாம் களைந்துவிடுகிறது. வலி மனிதர்கள் உண்மையில் எத்தனை தனியர்கள் என்று அவர்களுக்குக் காட்டுகிறது... வலி மனிதர்களுக்கு மனம் என்பது உடலில் இருந்து எத்தனை தூரம் விலகி இருக்கிறது என்று தெளிவாக்குகிறது... வலியை எதிர்கொள்ள சிறந்த வழி என்பது வலியை கூர்ந்து கவனிக்க ஆரம்பிப்பதே... வலியில் நாம் நினைப்பவை எல்லாமே வலியுடன் தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன... எதையும் கூர்ந்து நோக்கும்போது நம்முடைய மனம் அதில் இருந்து மெல்ல விலகிவிடுகிறது... அந்த வலியை வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கிறது... அந்த வேடிக்கை அவ்வனுபவத்தில் உள்ள அச்சம், துயரம், வலி போன்றவற்றை பெருமளவுக்குக் குறைத்து விடுகிறது... *****அனைத்து வலிகளில் இ

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சோறு

சோறே தெய்வம்... இது அனைவரும் அறிந்த ஒன்று தான்... அன்றாடத்தில் உழல்வதால் நாம் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை... பசியைக் கூட இப்பொழுது பெரிதாக பொருட்படுத்துகிறார்களா என்ற ஒரு சந்தேகம் உண்டு... ஆனால்... பசி அதற்குப்பின்னான சோறு... இவ்விரண்டையும் ஒரு நாடகியத் தருணமாகவே நான் எடுத்துக்கொள்வேன்... சிறிது பசியெடுத்தாளும் அதைப் பெருமளவு என்னுள் வளர்த்துக்கொள்வேன்...  ஏனென்றால் அந்த வேலை கிடைக்கப்போகும் சோற்றை அமிர்தமாக்குவது அதுதான்... சுடுச்சோற்றை வடித்தவுடனே, தட்டிலில் கொட்டி கையை விரித்து அதனருகே கொண்டு செல்வேன்... அதிலிருந்து வரும் வெம்மையான ஆவி நரம்புகளை மேலும் சுண்டச்செய்து பசியை ஒருபடி மேலே கொண்டு செல்லும்... அப்பொழுது அருந்தும் முதற்கவலம் பெரும்பேறு... சோறு என்ற ஒற்றை நினைப்பே மொத்த உடலாக மாறி உள்ளது... இந்த பசியைப் போக்க கவித்துவமான உச்சம் தேவைப்படுகிறது... சோறு தான் தெய்வமாக நின்று அருள்பாலிக்கிறது... பெரும்பசியின் இறுதியில் உண்ணும் முதல் கவலம் சோறு வரவழைக்கும் ஆற்றவல்லா கண்ணீரை நினைவுபடுத்துகிறது... சோறு அளிக்கும் மிகப்பெரும் கொண்டாட்டம் அளப்பரியது... சோறு என நாம் சொல்லும் இப்ப

கண்ணாடி

ஏன் நிலைக்கண்ணாடியை நாம் காணமுடிவது இல்லை..?   ஏனெனில் அது முழுமையாக பிரதிபலிக்கும் தன்மையை கொண்டுள்ளது என்பதனாலேயே.  ஆனாலும் பிரதிபலிக்கும் பிம்பங்கள்தான் கண்ணாடி என்று சொல்லிவிடமுடியாது. பிரதிபலிக்கும் செயலைச் செய்தபடி ஒரு கண்ணாடி காணப்படாமல் இருந்துகொண்டிருக்கிறது... என் மனதை அறியும்போது அது ஓயாமல் இயங்கியபடியே இருப்பதைக் காண்கிறேன்... நான் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் அது செயல்பட்டபடியே இருக்கிறது... என் மனம் என்று சொல்வது எதை...?  மனதின் பிம்பங்களின் இந்த ஓட்டத்தைத்தான்..! ஆனால் மனம் என்பது அதுதானா..? எந்தக் கருவி அந்த படங்களை தயாரிக்கிறது..?  எது அவற்றை ஒளிபரப்புகிறது..?  எதன் மீது அவை ஓடுகின்றன..?  அதை பார்ப்பது எந்த விழி..? மனம் என்பது எண்ணங்களின் தொடரோட்டமும் அந்தத் தொடரோட்டத்தை அறியும் இன்னொரு ஓட்டமும் ஆகும்..!  அவற்றில் எது எதை கண்காணிக்கிறது என்பது அந்தத் தருணத்தில் நான் எப்படி உணர்கிறேன் என்பதைப்பொறுத்தது மட்டுமே..!  என் மனதைக் கவனிக்க ஆரம்பித்ததுமே நான் கவனிக்கிறேன் என்பதைக் கவனிக்க ஆரம்பிக்கிறேன்..! ஆம், மனம் இயங்கியபடியே இருக்கும் நிலையில் சாதாரணமாக என்னால் அதை அறிய

துவாரகை பயணம்

பயணம் என்பது ஒரு உயிருக்குள் என்ன நிகழ்த்துகிறது...?  பிரபஞ்ச இயக்கம் ஒவ்வொன்றிலும் ஒரு பயணத்தவிப்பு உள்ளடங்கியிருக்கிறது. இயற்கை என்பது விளைவுகளால் ஆனது.  விளைவு என்பது ஒருவகையில் செயலின் பயணம் தான்.  ஒரு பயணம் என்ன செய்யும்...?  மண் திறந்த ஒரு சிறுவிதையை வான்நோக்கி எழுகிற பெருவிருட்சமாக வளர்த்துகிறது.  முட்டையைக் கிழித்து நிலம் தவழும் ஒரு ஆமைக்குஞ்சை ஆழ்கடலை அடைய வைத்து ஆயுள் அளிக்கிறது.  காற்றில் சிறகசைக்கும் சிறுபறவையை கண்டங்கள் தாண்டி கொண்டுசெல்கிறது.  மேகத்துள் திரளும் நீர்த்திவலையை பூமி மீது மகிழமகிழ விழ வைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு பயணம் நம்முடைய சிறுசிறு நம்பிக்கைகளை உடைக்கிறது.  அதன்மூலம் நம்மை நிலைகுலைக்கிறது.  ஆனால் கொஞ்ச காலத்திற்குப்பின், உடைந்தழித்த நம்பிக்கைகள் நமக்குள் பெரும் நம்பிக்கைகளாக உருப்பெருகிறது.  வாழ்வின் மீது அளவிலாத விருப்பத்தை வழங்குகிறது.  இதற்கு முன் நம்பியதைவிட இன்னும் வலுவாக நம் மனதை நம்பச்செய்வதே ஒரு பயணம் நமக்குள் நிகழ்த்தும் அருஞ்செயல். இந்த பயணம், கைகளில் புகைப்படக்கருவியை ஏந்திப் பயணித்த ஒருவனின் மறக்கவியலாத பயணநினைவுகள் மற்றும் அதன் காட