Skip to main content

Posts

Showing posts from May, 2020

எழுத்தாளர் திரு.ஜெயமோகன் உடன்...

நான் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் உடன் நான் தொடர்ச்சியாக உங்களை வாசித்து வருகிறேன்.  எனது நண்பன் G. பாலமுருகன் எனக்கு உங்களின் அறிமுகம் எனது நண்பன் G. பாலமுருகனால் கிடைத்தது. உங்களுடைய அக மற்றும் புற புனைவுகளே எனக்கு மிக நெருக்கமாய் உணருகிறேன். ஊமைச்செந்நாய்தான் நான் வாசித்த உங்கள் முதல் தொகுப்பு.  ஊமைச்செந்நாயும் மத்தகமும் இன்றைக்கும் நான் படித்த உங்கள் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானவை. பிறகு காடு, ஏழாம் உலகம், கன்னியாகுமரி, அனல் காற்று, இன்றைய காந்தி, விஷ்ணுபுரம், கன்னி நிலம்,  பின் தொடரும் நிழலலின் குரல் என நாவல்கள். மற்றும் அறம் சிறுகதைகள் மீது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.  ஒரு வாசகனை எங்கே அடித்தால் வீழ்வான் என்பதைத் தெரிந்து எழுதும் ஒரு சூட்சமம் அந்தக் கதைகளில் இருந்தது.  உங்களுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான திசைகளின் நடுவே வாசித்துக் இருக்கிறேன். படுகை உங்களுடைய ஆகச் சிறந்த கதைகளில் ஒன்று. முதல் கதையான நதியை எளிதில் தாண்டிப் போக முடிந்தது. இரண்டாவதாக நான் வாசித்தது போதி. சற்றே குலைந்து போய் விட்டேன். ஒரு மனிதனின் துயரத்தை இத்தனை ந

மலை பயணம்

எடுத்த எடுப்பிலேயே தழுவி எல்லாம் முடிந்திருந்தால் ஏமாற்றம் மிகுந்திருக்கும்... எவ்வளவு ஏக்கத்தை கடந்து எத்தனை பக்கங்கள் தாண்டி எல்லாம் நடக்காமல் நடந்து முடிகிறது.... நீர் நிறைந்த  ஆற்றின் மேலோட்டத்தில் சில சலனங்கள் சில கொந்தளிப்புகள் மட்டும் தெறியும்... காற்றின் வேகத்தில் சிலசமயம் மேலே அதன் சிலிர்புகளையும் காணமுடியும்... இயற்கை தன்னை என்றும் அழித்துக் கொள்ள நினைப்பதில்லை... மாறாக பெரும்உருவாக விரிந்து வளர்ந்து செல்லவே நினைக்கிறது... ஒவ்வொரு துளியிலும் வளர்ச்சி என்ன என்பதை காண துடித்துக் கொண்டிருக்கிறது... அதன் அழிவிலிருந்து தன்னை மறுஆக்கம் செய்து கொள்கிறது... அதன்முன் மண்டியிட்டு தன்னை காத்துக்கொள்ள துடிக்கிறான் மனிதன். .. இயற்கையாக மாறும் ஒருவனே இயற்கையின் ஒன்றான காட்டில் வாழமுடியும், சாகவும் முடியும்...  வாழ்க்கைப் பயணத்தில் உச்சங்கள் மட்டுமே அமைவதில்லை, தோல்வியும் கீழ்மையும் கூடவே வருகிறது...  ஆனால் வாழ்க்கை வசீகரிக்கவே செய்கிறது...  பயணத்தை மீண்டும் மீண்டும் செல்ல  தூண்டுகிறது...!!!

சென்னை TO மங்களூர் பைக்கில் பயணம்

நம் வாழ்நாளில் நம் மனதில் ஏதேனும் லட்சியபயணத்தை அடைய நினைத்து கொண்டே இருப்போம்... அந்த நினைவின் செயலாக உருவானதே எங்கள் வாழ்நாளில் மறக்முடியாத இந்த சென்னை TO   மங்களூர் பைக் பயணம்... SMR  பிரதீப் நான் கண்டிப்பாக இந்த பயணத்தில் எனது நண்பன் SMR  பிரதீப்க்கு நன்றி சொல்லியாக வேண்டும்... ஏனெனில் SMR ஒரு சாகசகாரன்... SMR  இல்லை என்றால் இந்த பயணம் சாத்தியம் இல்லை.. இந்த பயணத்தில்... நான் ,ஹமீது & SMR... ஒரு மாதத்திற்கு முன்பே நாங்கள் அனைத்து ஏற்பாடு களையும் திட்டமிட்டு வரையரை செய்து கொண்டோம்... 1. சென்னை  TO  மேட்டுபாளையம் Train ticket  முன் பதிவு செய்து கொண்டோம்... 2. SMR தான் நாங்கள் Bike-ல் மேட்டுபாளையம் TO மங்களூர் செல்ல Route Map பக்கவாக தயார் செய்தான்... 3. அது போல் நாங்கள் ஒரு நாளைக்கு Bike-ல் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் மற்றும் மாலை 6-மணிக்கு மேல் Bike-ல் பயணிப்பதை தவிர்த்து அருகில் உள்ள ஊரில் Hotel-ல் தங்கவேண்டும் என்று நண்பன் SMR மிகவும் நேர்தியாக வரையரை செய்தான்... 4. அதுபோல் நாங்கள் மங்களூர் அடைந்தவுடன் நாங்கள் சென்னை வருவதர்க்கு Train ticket

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந்தது