Skip to main content

Posts

Showing posts from December, 2020

மகாகாளி-பாவகத் கோவில் யாத்திரை

பஞ்சமஹால் மாவட்டத்தின் ஹலோல் தாலுகாவில் உள்ள அழகிய மலையான பாவகத் கோயில் குஜராதின் புனித சக்தியாக கருதப்படுகிறது... இது ஒரு மத யாத்திரை மற்றும் இயற்கை அழகு.   இந்த அழகிய சிகரத்தின் மிக உயர்ந்த சிகரத்தில் அமர்ந்திருக்கும் ஜகத்ஜன்னானி மாகாளிகா தேவியை நான் சென்று சாமி தரிசனம் செய்தேன்... எனக்கு இந்த கோவில் யாத்திரை அனுபவமும் மற்றும் மகா காளியின் தரிசனமும் என மனதில் என்றும் நிலைத்து நிற்கும்... இந்த யாத்திரை பாவகத் மலைத்தொடரில் ஒரு அற்புதமான அழகைக் கண்டு ரசிக்க செய்தது... இந்த மலை இயற்கை பேரழிவுகள் மற்றும் புயல்களுக்குப் பிறகும் மில்லியன் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து கொண்டு இருக்கிறார்கள். மலை உச்சியில் கோவில் இன்னும் புதிய கட்டிடம் கட்டுதல் மற்றும் தூய்மை சார்ந்த விஷயங்கள் சிறப்பாக உள்ளது. பாவகாத் யாத்திரை இது அழகிய யாத்திரை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது அடிவாரங்கள், மஞ்சி மற்றும் ஸ்ரீ மகாகலி மாதாஜி.   இந்த மலையின் உச்சியில், ஆதித்யா சக்தி என்ற ஸ்ரீ காளிகா மாதாஜியின் சன்னதி நிலப்பரப்பின் மிக உயர்ந்த பகுதியிலும், பரந்த சமவெளியிலும் அமைந்துள்ளது.   இங்கு அமைந்துள்ள சாசி

கோவை ஈஷா யோகா

கோவை ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன்  பூன்டி செல்லும் வண்டியில் அமர்ந்து ஈஷா நோக்கி  பயணமானோம். கோவை மாநகர எல்லை முடிந்து பேரூர் கோவிலை தரிசித்து விட்டு வெள்ளியங்கிரி மலை அடிவாரம் நோக்கி செல்லும் சாலையின் இரு புறமும் பச்சை பசேலன தோட்டங்கள் மற்றும் அதன் நடுவினிலே வீடுகள் அன்று பார்க்கவே ரம்மியமாக இருந்தது. ஈஷா தியான மையம்: ஈஷா தியான மையம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.  தியான மையம் மட்டுமல்லாது தீர்த்தக்குண்டம், லிங்க பைரவி ஆலயத்தையும்   உள்ளே கொண்டுள்ள பிரம்மாண்டமான கட்டுமான அமைப்பு. தீர்த்தக்குண்டம் என்னும் அமைப்பு  கற்களால் அமைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய தொட்டி (கற்களால் ஆன குளம்) போன்றுள்ளது. இந்த குளத்தின் நடுவினில் நீர்வீழ்ச்சி கொட்டிக்கொண்டிருகின்றது.  மூன்று பாதரச லிங்கங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியினில் நீரில் மூழ்கியபடி நிறுவப்பட்டுள்ளது. இந்த பாதரச லிங்கங்களை குளத்தில் இறங்கி கையால் தொட்டு வணங்க முடியும்.  இந்த குளத்தில் இறங்கி தரிசிக்க வேண்டுமெனில் அதற்கென்று அமைக்கப்பட்ட இடத்தினில் குளித்துவிட்டு வெறும் காவி துண்டுடன் தான் தரி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்... கோபுர தரிசனம் பாப விமோசனம்...  ஆசியாவிலேயே மிக உயர்ந்த பிரமாண்ட ராஜகோபுரம் கொண்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.  13 நிலைகளையும் 14 மங்கலக் கலசங்களையும் கொண்டு 236 அடி உயரத்தில் காட்சி தருகிறது. ஸ்ரீர‌ங்க‌ம் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது. இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.  தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது. இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலினின்று தோன்றியவர். இவரை பிரம்மா  நெடுங்காலமாக பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு  நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார்.  சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார்.  ராவணன் சீதையை கடத்தி சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான்.  ராமரின் முடிசூட்டு விழா

எழுத்தாளர் திரு.S.ராமகிருஷ்ணன் உடன்

நான் சென்னைக்கு வேளை தேடி வந்தபோது எனக்கு எந்தப் பிடிமானமும் கிடையாது.  எல்லாவற்றையும் நான் உருவாக்கிக்கொண்டேன். அப்படி உருவாக்கும்போது எனக்கு என்ன தோன்றியது என்றால், “நான் உறுதியாக இருந்தால் அது நடக்கும்” என்றுதான். அதுதான் நடந்தது.  இது சொல்வதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது. ஆனால், கடந்துவரும்போது மிகத் துயரமாக, மிகக் கடுமையாக இருந்தது. என்னை போல நீங்களும் பல கடினமான வாழ்க்கை அனுபவங்களை கடந்து வந்த நினைவுகள் உங்கள் இதயத்தில் தினமும் ஓடி கொண்டிருக்கும். நான் சென்னைக்கு படித்து முடித்ததும் வேலை தேடி சென்றேன். எனக்கு வேலை அவ்வளவு சீக்கிரமாக கிடைக்கவில்லை. நான் பெரும்பாலும் சென்னை அசேக்பில்லரில் உள்ள நூலகத்தில்தான் பெரும்பாலும்  இருப்பேன். அப்போதுதான் எழுத்தாளர் திரு S.ராமகிருஷ்ணனை நான் சந்தித்தேன். பிறகு அவருடனான பழக்கமும், அனுபவமும் மற்றும் அவருடைய புத்தகமும் பின்னாலில் என் வாழ்கையில் மிக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவருடைய புத்தகங்களை வாசிக்கும் போது நானும் இவரை போல் பயணிக்க வேண்டும் என்று என் உள்மனதில் ஒரு தாக்கம் உண்டானது. நான் இவர் ஒவ்வொரு புத்தகங்கள படித்து முடித்த பிறகு

திருவண்ணாமலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

எனது வாழ்க்கையில் கடினமான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் எனது உடல், மனம் மற்றும் ஆவியை ஒருமுகப்படுத்தி நவ்வாழ்கை வழங்கியவர் என்று எனது இதயத்தில் வாழும் எனது தாய் மற்றும் தந்தை போல் என்னுடன் இருக்கும் இந்த திருவண்ணாமலை உண்ணாமுலையாள் (பார்வதி) மற்றும் அண்ணாமலையார் (சிவன்) நான் பலமுறை திருவண்ணாமலை சென்று இருக்கிறேன். எனது திருமணத்திருக்கு முன்பும், திருமணமாகி எனது மனைவி ஆறு மாத காலம் தாய்மையாக இருந்த போது நாங்கள் திருவண்ணாமலை சென்று தரிசித்து விட்டு நாங்கள் குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பாக வந்து தரிசிக்கிறோம் என்று வேண்டிக்கொண்டோம். அதுபோல எங்கள் மகன் சர்வேஸ்வரன் பிறந்த பிறகு நாங்கள் திருவண்ணாமலை கோவில் சென்று நாங்கள் ஆசிர்வாதம் பெற்று வந்தோம். "நம்பினால் கைவிடமாட்டார் இந்த திருவண்ணாமலையார்". திருவண்ண்னாமலைக்கு பழங்காலம் முதலே ஒரு தொன்ம முக்கியத்துவம் உள்ளது. சங்க காலம் தொட்டு குறிப்பிடப்பட்டுவரும் சில கோயில்களில் அது ஒன்று. நிலவியலில் அடுத்த தடயம் உள்ளது. திருவண்னாமலை  ஒரு எரிமலை. திருவண்ணாமலையில் உள்ள அந்த எரிமலை பல லட்சம் வருடம் பழையது.  அந்த எரிமலை வெடித்து சிதறிய போது தீக்கு