Skip to main content

Posts

Showing posts from 2021

அகமறியும் ஒளி:

பார்வை என்பது என்ன...? ஒளிவழியாக அகப்புலன் தொடர்புறுதல். அவ்வளவுதான்... அது இல்லையேல் ஒலி... அது இல்லையேல் தொடுகை... மானுட அறிதல் என்பது புலன்களை நம்பி இல்லை...  அது உள்ளிருந்து அனைத்தையும் அறிந்துகொண்டிருக்கும் ஒன்றின் கூர்மையையும், நிதானத்தையும் நம்பியே உள்ளது... பார்வையிழந்த ஒருவருடைய உலகம் நுண்ணிய தகவல்களால் மட்டுமே நாமறிவதில் இருந்து வேறுபட்டது...!!!

மேடு பள்ளம்

  ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் வாழ்க்கை கடினமான மற்றும் துன்பம் நிறைந்ததாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள்... இந்த மலையில் இருந்து நான் எய்திய ஒரு அம்பு நேர்கோட்டில் பயணித்து இலக்கை அடைகிறது, அதன் நிழல் இந்த காடு மேடு நதிகளிலும் விழுந்து அம்பு அடையும் இலக்கை தானும் அடைகிறது... எனவே என் வாழ்க்கை மற்றும் இந்த மலை பயணம் செய்யும் போது பற்பல மேடு பள்ளங்களை கடந்து தான் நான் எனது வாழ்க்கை என்னும் இந்த மலை உச்சியின் வெற்றி இலக்கை அடையமுடிந்தது...!!!

என் ஆன்மாவும் உடலும் பேசியபோது

 தென்றல் போல் மரணம் உடலை தழுவி ஆன்மாவை அழைத்து செல்லும்... மரணம் பயமா...?  இல்லை அதிசயம்.... பிறப்பு மாதிரி இறப்பும் அதிசயம்... இந்த உடலைப் பார்க்கும்போது இந்த ஷணம் அதிசயம்தான் "ஹா" என்று நிற்கிறது... எனக்கு மரணம் உண்டு இன்றோ, நாளையோ அல்லது நாளை மறுநாளோ... ஒரு நாள் என் இருப்பு வெற்றிடமாகும். என் அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி, கோபம், தாபம், மோகம் எல்லாம் பொய்யாகும்.  ஒருவேளை பயம் மட்டும் என்னோடு வரும்மா...? ஒருவேளை உயிரின் ஒரே குணம் பயமோ...?  அடுத்தது என்ன என்கிற பயம் தொடருமோ...?  மறுபடி மறுபடி பிறந்தது என்கிறார்களே, அதுபோல மறுபடி எங்கே பிறக்கப் போகிறோம் என்கிற பயம் உயிருடன் ஒட்டியிருக்குமோ...?  அப்போது பேரானந்தம் என்பது என்ன...?  அட எது வேணா நடக்கட்டும் என்கிற நிலையா...?  எப்ப வேணா நடக்கும் என்கிற தெளிவா...?  எது நடப்பினும் சரி என்கிற குணமா...? இந்த ஷணம் எனக்குள் அப்படித்தான் இருக்கிறது... எவரோடும் எதனோடும் ஒட்டாத நிலை இருக்கி   இருக்கிறது...  இப்படி நடந்திடும் எனக்கு என்று அழுகையில் எதிர்ப்பு காட்டிப் போராடுகிற குணமும் இல்லை... அப்பா... இது விடுதலை என்று போற்றுகிற குணமும்

Happy friendship day...

  உத்தேசிக்கும் பயணம் என்பது ஒரு திறந்த அனுபவ வெளி.  அங்கே துன்பமும் இன்பமும் அனுபவங்களே.  சிக்கல்களும் பிரச்சினைகளும் கூட அனுபவங்களே.  அவ்வனுபவங்களை தேடித்தான் பயணம் செய்கிறோம்.  அவை நிகழும்போது நமக்கு அச்சமும் பதற்றமும் கோபமும் எல்லாம் ஏற்படலாம்.  ஆனால் பின்னால் திரும்பிப் பார்க்கும்போது அவையும் நம் பயண அனுபவத்தைச் செழுமைப்படுத்தியிருப்பதைக் காணலாம்.  அனைத்துவகையான அனுபவங்களுக்கும் நம்மை திறந்து விடுவதே பயணம் என்பது.  அந்தமனநிலை நமக்கு இருக்குமென்றால் எல்லாவற்றையுமே ரசிக்க ஆரம்பித்துவிடுவோம்.  வழிதவறுவது, வண்டி உடைந்துவிடுவது, தங்க அறையில்லாமல் தெருவில்நிற்பது எல்லாமே சுவாரசியமாக ஆகிவிடும். Happy friendship day...

வாழ்க்கை

வாழ்க்கை என்பது ஏதோ ஒன்றை அடைவதற்காக, வெல்வதற்காக நிகழ்வது என்ற எண்ணத்திலிருந்துதான் பலவிதமான பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. வாழ்க்கையின் இளமைப்பருவத்தில் நாம் நம் வாழ்க்கை ஏதோ ஒரு பெரிய விஷயத்துக்கான கருவி என்ற எண்ணத்திற்கு ஆட்படுகிறோம் அதீத உற்சாகத்துடன் பலவற்றில் ஈடுபடுகிறோம். ஒருவர் உலகியல்சார்ந்த எந்த விஷயத்திலும் ஒற்றைப்படையான தீவிரத்துடன் ஈடுபட்டாரென்றால் அவர் ஒரு வெறுமையைச் சந்திப்பது உறுதி. அதில் அவர் வென்றாலும் தோற்றாலும். வாழ்க்கை என்பது அதன் பல்வேறு கூறுகள் நடுவே உள்ள சமநிலையாலானது. வாழ்க்கையின்போக்கில் அனைவரும் அறியும் ஒன்று உண்டு. நம்மைச் சூழ்ந்துள்ள உலகியல் வாழ்க்கை என்பது மிகச்சிக்கலான ஒரு வலை போல. பல்லாயிரம்பேரின் ஆசைகளும் வேகங்களும் முட்டிமோதும் ஒரு வெளி. தற்செயல்களினாலான மாபெரும் பின்னல். அதில் ஒருவர் செயல்படமுடியுமே ஒழிய விளைவைக் கண்டிப்பாக எதிர்பார்க்கமுடியாது. எதிர்பாராமைகள்தான் வாழ்க்கையைப் பெரும்பாலும் தீர்மானிக்கின்றன. அந்தப் புரிதலை அடையும்போது வாழ்க்கையை ஒரு நோக்கத்துடன் செலவிட்டவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். வாழ்க்கை வீணாகிவிட்டதாக உணர்கிறார்கள். முடிந்துவிட்டதென்

புத்தகம்

"புத்தகம்" எழுதிய ஒரு வரி உன்னுள்ளே ஒரு புத்தகத்தகமாய் விரியுமானால் அது அறிவுரை இல்லை ஆலம் வித்து... பக்கங்களில் நிரம்பி வழியும் வார்த்தைகளல்ல ஒவ்வொரு வார்த்தைக்குள் நிரம்பி வழியும் அறிவு... புதிய நண்பன் வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் , புதிதாய் புத்தகம் ஒன்றை வாங்குகிறேன்.... கால இயந்திரத்தில் ஏறி வேறுவேறு காலங்களுக்குப் பயணம் செய்வது போன்ற அனுபவத்தையே புத்தகங்களும் தருகின்றன... என் வாழ்க்கை கால அளவில் மிகச்சிறியது. ஆனால் இந்த வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கைகளை, பல்லாயிரம் அனுபவங்களைப் புத்தகம் வழியே அனுபவித்துவிட முடிகிறது. ஒரு நல்ல ஆசிரியர் எப்போதும் துணையிருப்பது போலச் சிறந்த புத்தகம் நமக்கு வழிகாட்டுகிறது... விலை கொடுக்க முடியாதது நட்பு என்றார்கள். சிறந்த நட்பிற்கு விலை கொடுத்துவிட்டேன்... "புத்தகம்".  

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்

மிக சாதாரண மனிதன் தன் இதயத்தில் ஏழுமலையானை பக்தியோடு வழிபட்டால். அவருடைய தரிசனம் பிரமிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் . இந்த பதிவில் எங்களுக்கு கிடைத்த திருப்பதி ஏழுமலையான் தரிசனமும் மற்றும் எங்கள் பயண அனுபவங்கள் பற்றி கூற உள்ளோம். நாங்கள் 13 செப்டம்பர் 2019 அன்று திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை பெற்றோம். நாங்கள் இந்த தரிசனம் பெற கிட்டத்தட்ட ஆறு மாத காலம் ஏழுமலையானை எங்கள் இதயத்தில் வைத்து பிரார்த்தனை செய்து வந்தோம்.  நாங்கள் குடும்பத்துடன் சென்று வழிபட்டு வந்தோம். ஏன் நாங்கள் ஆறுமாதம் முன்பே இந்த பயணத்தை பற்றி திட்டங்களை வகுத்தோம் என்றால். சிறு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வருவதால் அவர்களுக்கு எந்தவித சிரமம் இல்லாமல் இருக்க. நாங்கள் எங்கள் தரிசன Ticket_ஜ மூன்று மாதங்களுக்கு முன்பு திருப்பதி online-ல் பதிவு செய்து கொண்டோம்.  ஒருவேளை தாமதம் ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு online ticket கிடைப்பது கடினமான ஒன்று. எங்களுடைய அதிர்ஷ்டம் எங்கள் எல்லோர்க்கும் Ticket கிடைத்து விட்டது. அதேசமயம் எங்கள் அதிர்ஷ்டம் நாங்கள் திருப்பதி மலையில் தங்குவதற்க்கும் online_ல் Ticket கிடைத்தது மிகவும் எங