Skip to main content

பாவமும் புண்ணியமும்

 



நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை குறித்து வைக்கும் சித்ரகுப்தனுடைய பிறந்த நாள் தான் சித்ராபௌர்ணமி தினமாக கொண்டாடப்படுகின்றது. 

இந்த சித்ரா பவுர்ணமிதின வழிபாட்டை சுலபமாக அவரவர் வீட்டில் எப்படி மேற்கொள்வது என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். சுருக்கமாக சொல்லப்போனால் உங்களால் முடிந்த பிரசாதத்தை சித்ரகுப்தனுக்கு படைத்து, உங்களுடைய குடும்பத்தோடு சேர்ந்து அந்த பிரசாதத்தை நிலா வெளிச்சத்தில் அமர்ந்து உண்ணுவது குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும், நன்மையும் கொடுக்கும்.

சித்திரை மாதம் என்றாலே சூரியபகவான் உக்கிரமாகத் தான் இருப்பார். அதேபோல இந்த சித்திரை மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி தினத்தில் சந்திரபகவானும் பிரகாசத்தோடு தான் காட்சி தருவார். இந்த உலகம் இயங்குவதற்கு முழுமுதல் காரணமாக இருக்கும் சூரிய பகவான் சந்திர பகவான் இவர்கள் இருவரின் சக்தியும் இந்த பூமிக்கு அதிகமாக கிடைக்கப்படும் சித்திரை மாத பவுர்ணமி வழிபாடு நமக்கு பல நன்மைகளை கொடுக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.

சரி, இப்போது சித்ரா பவுர்ணமி அன்று நாம் செய்ய வேண்டிய தானத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம். சித்திரை மாதம் என்பதால் கட்டாயமாக சூரியனின் தாக்கம் தற்போது அதிகமாக தான் இருந்து வருகின்றது. உங்களால் முடிந்த அளவு தாகத்தை தணிக்கக் கூடிய தண்ணீர், பழ வகைகள், குளிர்பானங்கள், நீர்மோர் போன்ற பொருட்களை வாங்கி ஏழை எளிய மக்களுக்கு தானமாக கொடுக்கலாம்.
முடியாதவர்கள் ஒரு சிறிய பாத்திரத்தில் உங்கள் வீட்டு மொட்டை மாடியிலோ, உங்கள் வீட்டு வெளிப்பக்கத்திலோ சிறிய பாத்திரத்தில் கொஞ்சமாக தண்ணீரை வையுங்கள். அந்த தண்ணீரை தாகத்திற்காக கஷ்டப்படும் வாயில்லா ஜீவன்கள் குடித்தாலே உங்களுக்கு புண்ணியம் சேரும்.

அடுத்ததாக தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்லுவார்கள். சித்ரா பௌர்ணமி அன்று பசியோடு இருக்கும் யாருக்காவது ஒருவருக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பது நன்மையை சேர்க்கும். இறுதியாக இப்போது நாம் ஒரு தானத்தை பற்றி தெரிந்து கொள்ளப் போகின்றோம். மேல் சொன்ன தானங்களை உங்களால் செய்ய முடிந்தாலும் சரி, செய்ய முடியவில்லை என்றாலும் சரி, இந்த ஒரு தானத்தை மட்டும் செய்ய மறக்க வேண்டாம்.
சித்திரகுப்தனுடைய வழிபாட்டில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று எது என்றால் நோட்டுப் புத்தகமும், ஒரு பேனா அல்லது பென்சில் தான். ஏனென்றால் நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை அவன் குறித்து வைப்பது நோட்டுப் புத்தகத்தில் தானே! இதுநாள்வரை நாம் செய்த பாவங்களை மன்னித்து, நாம் செய்த புண்ணிய கணக்குகளை மட்டும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். நாம் செய்த பாவ கணக்குகளுக்கான தண்டனைகள் குறைக்கப்பட வேண்டும், என்று சித்திர குப்தனை வேண்டிக்கொண்டு படிக்கும் ஏழை குழந்தைகளுக்கும் ஒரு நோட்டு, ஒரு பென்சிலை தானமாகக் கொடுப்பது நம்முடைய பரம்பரைக்கே புண்ணியத்தை சேர்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

உங்கள் வீட்டு அக்கம்பக்கத்தில் இருக்கும் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு ஒரு நோட்டு, பேனா அல்லது பென்சில் தானமாக வாங்கி கொடுங்கள். உங்களால் முயன்ற அளவு 3 பேருக்கு தானம் செய்யலாம். 11 பேருக்கு தானம் செய்யலாம். அது உங்களுடைய வசதியை பொருத்தது. ஆனால் சித்ரா பௌர்ணமி நாளில் நீங்கள் செய்யக்கூடிய இந்த ஒரு தானம், உங்களது ஏழு ஏழு தலைமுறைக்கும் புண்ணியத்தை சேர்க்கும்

   

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந...

திருவண்ணாமலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

எனது வாழ்க்கையில் கடினமான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் எனது உடல், மனம் மற்றும் ஆவியை ஒருமுகப்படுத்தி நவ்வாழ்கை வழங்கியவர் என்று எனது இதயத்தில் வாழும் எனது தாய் மற்றும் தந்தை போல் என்னுடன் இருக்கும் இந்த திருவண்ணாமலை உண்ணாமுலையாள் (பார்வதி) மற்றும் அண்ணாமலையார் (சிவன்) நான் பலமுறை திருவண்ணாமலை சென்று இருக்கிறேன். எனது திருமணத்திருக்கு முன்பும், திருமணமாகி எனது மனைவி ஆறு மாத காலம் தாய்மையாக இருந்த போது நாங்கள் திருவண்ணாமலை சென்று தரிசித்து விட்டு நாங்கள் குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பாக வந்து தரிசிக்கிறோம் என்று வேண்டிக்கொண்டோம். அதுபோல எங்கள் மகன் சர்வேஸ்வரன் பிறந்த பிறகு நாங்கள் திருவண்ணாமலை கோவில் சென்று நாங்கள் ஆசிர்வாதம் பெற்று வந்தோம். "நம்பினால் கைவிடமாட்டார் இந்த திருவண்ணாமலையார்". திருவண்ண்னாமலைக்கு பழங்காலம் முதலே ஒரு தொன்ம முக்கியத்துவம் உள்ளது. சங்க காலம் தொட்டு குறிப்பிடப்பட்டுவரும் சில கோயில்களில் அது ஒன்று. நிலவியலில் அடுத்த தடயம் உள்ளது. திருவண்னாமலை  ஒரு எரிமலை. திருவண்ணாமலையில் உள்ள அந்த எரிமலை பல லட்சம் வருடம் பழையது.  அந்த எரிமலை வெடித்து சிதறிய போது தீக்கு...

வெள்ளியங்கிரி மலை பயணம்...

வெள்ளியங்கிரி மலை பயண அனுபவம்தான் எங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த பயணங்கள் செய்ய வழிவகுத்தது... நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த வெள்ளியங்கிரி மலை பயணம் செய்ய வேண்டும்... இந்த பூமிப் பிரபஞ்சத்தில் மிகச் சிறந்ததும், புண்ணிய பூமியுமான நம் பாரத தேசம், மிகப் பழமையானதும், சக்திவாய்ந்ததும் ஆகும். எண்ணற்ற மகான்கள் மற்றும் சித்தர்கள் மலைவாழிடங்களில் தங்களின் சக்தியாலும், தவத்தாலும் கணக்கற்ற மலைகளில் கோவில்களும், ஆன்மீக மடங்களும், பீடங்களும் நிறுவி இருக்கின்றார்கள். அங்கு நாம் செல்வதின் மூலம், நாம் நமது மனம், உடல் மற்றும் ஆன்மாவை வலுப்படுத்திக் கொள்ள முடியும். சில இடங்களில் இறைவனே சுயம்புவாக வந்து குடியேறியும் உள்ளார். அப்படி எல்லாம் வல்ல ஈசனாகிய சிவபெருமான் வந்து குடியேறிய இடம் தான் நாம் பார்க்கும் தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை திருத்தலம். கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு வழிபாட்டுத்தலம். ஏழு மலை கடந்து உச்சிக்கு சென்றால் நாம் தரிசிப்பது ஒரு சுயம்பு சிவலிங்கம். ஈஷா யோகா மையம் மற்றும் தியானலிங்கம் இருப்பதும் வெள்ளியங்கிரி...