Skip to main content

Posts

சிதம்பரம் நடராஜர் கோவிலின் அழகிய தோற்றம்...

 சிதம்பரம் நடராஜர் கோவிலின் அழகிய தோற்றம்......... 1. பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. 2. பஞ்சபூத தலங்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்களை வழிபட விரும்புபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பது ஐதீகமாக உள்ளது. 3. வைணவத்தில் கோவில் என்றால் ஸ்ரீரங்கத்தை குறிப்பது போல சைவத்தில் கோவில் என்றால் சிதம்பரம் நடராஜரையே குறிக்கும். 4. சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. 5. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் சிதம்பரம் கொண்டுள்ளது. 6. சிதம்பரம் நடராஜரை எல்லா கடவுள்களும் வந்து வழிபட்டு பேறு பெற்றனர். இதை உணர்த்தும் வகையில் நடராஜர் ஆலயம் முழுவதும் ஏராளமான சன்னதிகள் உள்ளன. 7. நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர ஏராளமான லிங்கங்கள் உள்ளன. 8. சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை. 9. திருவண்ணாமலை போன்ற
Recent posts

மகான்கள்

 🙏🏼🔥#மகான்கள்...🙏🏼   🔥🙏🏼#மாணிக்கவாசகர்.. #மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக நெருக்கமானவர்களுள் முக்கியமானவர். இவர் பாண்டிவள நாட்டில் வைகை ஆற்றங்கரையிலுள்ள திருவாதவூர் என்னும் ஊரில் அமாத்தியர் மரபில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார்.  🙏🏼#இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர் என்பதாகும். இவர் 9ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். பதினாறு ஆண்டுகள் நிரம்புமுன் இவர் கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் இவற்றில் சிறந்து விளங்கினார். இவர் வேத வித்தகர். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பார். இவரது அறிவாற்றலைக் கேள்விப்பட்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன், இவரை வரவழைத்து அமைச்சர் பதவியை அளித்து தென்னவன் பிரமராயன் என்ற பட்டத்தையும் அளித்தான். உயர்ந்த பதவி, செல்வம் அனைத்தும் இருந்தும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்து சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாட்டை பின்பற்றினார். 🙏🏼 🐎🔥#ஒருசமயம், சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்ட மன்னன் வாதவ

கும்பகோணத்தை பற்றி யாரும் கேள்விப்படாத 60 ரகசியங்கள்!

 கும்பகோணத்தை பற்றி யாரும் கேள்விப்படாத 60 ரகசியங்கள்!  கோயில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணம் மிக முக்கிய நகரமாக கருதப்படுகிறது.  இங்கு சைவ வைணவ கோயில்கள் அதிகம் உள்ளது.   கும்பகோணத்தில் மகாமகம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. அதுமட்டுமில்லாமல் பல ரகசிய சிறப்புகளையும் தன்னுள் கொண்டுள்ளது கும்பகோணம். அதைப் பற்றியே நாம் இங்கு பார்க்கப்போகிறோம். கும்பகோணத்திற்கு குடந்தை என்ற பெயரும் உள்ளது. குடந்தை என்பது குடமூக்கு ஆகும். பின்நாளில் குடமூக்கு என்பது மறுவி குடந்தை என்று பெயர் பெற்றது. 2. குடந்தை என்ற சொல்லுக்கு வளைவு என்ற பொருள் உள்ளது. முக்கிய நதிகளில் ஒன்றான காவிரி கும்பகோணம் வந்து வளைந்து செல்வதாலும் குடமூக்கு என்ற பெயரும் உருவானதாக சொல்லப்படுகிறது. 3. முக்கிய நதிகளான காவிரி கங்கை யமுனை சரஸ்வதி நதிகள் எல்லாம் கும்பகோணத்தில் உள்ளது என்று திருநாவுக்கரசர் பாடி பெருமை சோர்த்துள்ளார். 4. சோழ மன்னர்கள் கும்பகோணத்தையே பாதுகாப்பான நகரம் என்று தங்கள் கருவூலத்தை இங்கு அமைத்தனர். 5. சூத முனிவர் என்ற முனிவர் சிவரகசியம் என்ற நூலை உலகில் உள்ள மற்ற முனிவர்களுக்கும் எடுத்துரைத்தார். அந்த சிவரகசி

நவகைலாயங்கள் பற்றிய வரலாறு

 #சிவபெருமானுக்குரிய தமிழகத்தில் உள்ள #நவகைலாயங்கள் பற்றிய வரலாறு: தமிழகத்தின் நவ கைலாயங்கள் என்பவை தமிழ்நாட்டின் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஒன்பது சிவாலயங்கள் உள்ள ஊரைக் குறிப்பதாகும். இவை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ளது. இந்த தலங்களைத் தரிசித்தால் செய்த பாவங்களிலிருந்து விடுபட்டு முக்தி அடையலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தலங்களை மகாசிவராத்திரியன்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். #புராண_வரலாறு: அகத்திய முனிவரின் சீடர்களில் முக்கியமானவரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பி தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டதாகவும். அதற்கு அகத்திய முனிவரும் தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டதாகவும் அந்த மலர்களை தொடர்ந்து சென்ற

தினம் ஒரு தரிசனம்

 தினம் ஒரு தரிசனம்.. இடது கையில் வீணையைப் பிடித்தபடி சரஸ்வதி🍁.. சகஸ்ரலிங்கம்🙏..!!   அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில்...!! 🍁 தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க... இந்த கோயில் எங்கு உள்ளது? 🍁 தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் என்னும் ஊரில் அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு எப்படி செல்வது? 🍁 தேனியில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உத்தமபாளையம் என்னும் ஊர் உள்ளது. உத்தமபாளையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் சிறப்புகள் என்ன? 🍁 இத்தல மூலவரான காளாத்தீஸ்வரர் மற்றும் ஞானாம்பிகை இருவருக்கும் இடையே சண்முகர் (சோமாஸ்கந்த அமைப்பில்) தனிச்சன்னதியில் காட்சியளிக்கிறார். 🍁 இத்தல விநாயகர் ராஜகணபதி என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார். 🍁 சிவன் சன்னதி முன் மண்டபத்தின் மேற்சுவரில் ராசி, நட்சத்திர கட்டத்தின் மத்தியில் பத்மாசனத்தில் அமர்ந்து சடாமுடியுடன் வாஸ்து பகவான் காட்சி தருகிறார். வாஸ்து பகவானைச் சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள் ம

அண்ணாமலையார்

 *அண்ணாமலையார்*      நாவலர் தான் எழுதிய “அருணாசல புராணம்” நூலை படித்தால்தான் திருவண்ணாமலை தலம் எந்த அளவுக்கு பாவம் போக்கும் தலமாக உள்ளது என்ற அதிசயமும் ரகசியமும் உங்களுக்குத் தெரியவரும். *பாவம் போக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார்* நாம் தெரிந்தோ, தெரியாமலோ எத்தனையோ பாவங்கள் செய்து இருப்போம்.  அந்த பாவங்கள் அனைத்தையும் இந்தப் பிறவியிலேயே தீர்த்து விடுவது நல்லது.  இல்லையெனில் அந்த பாவங்கள் மூட்டையாக சேர்ந்து அடுத்தப்பிறவியிலும் தொடரக்கூடும். அதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. சரி.... இந்த ஜென்மத்து பாவங்களையும், கடந்த பிறவிகளில் செய்த பாவங்களையும் எப்படி போக்குவது?  இதற்காக நிறைய பரிகாரங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மிக, மிக எளிய வழி ஒன்று இருக்கிறது.  திருவண்ணாமலைக்குச் சென்று அருணாசலேஸ்வரரை சரண் அடைவதே அந்த எளிய வழி. திருவண்ணாமலை தலத்துக்கு சென்று ஈசனை மனதார வழிபட்டு பாவம் போக்கிக் கொண்டவர்கள் எண்ணிக்கையை அளவிட இயலாது.  விஷ்ணு, பிரம்மா, சூரியன், சந்திரன் ஆகியோரும் திருவண்ணாமலை வந்த பிறகே தங்களது பாவத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது. அந்த வரலாறுகளை எல்லாம் சைவ எல்லப்ப நாவலர் தான் எழுதிய “அ

தினம் ஒரு தரிசனம்

 தினம் ஒரு தரிசனம்.. நான்கு சக்கர வடிவங்கள்🙏.. பஞ்ச தீபாராதனை..!!   அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்...!! 🙏 தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க... இந்த கோயில் எங்கு உள்ளது? 🙏 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராஜபதி என்னும் ஊரில் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு எப்படி செல்வது? 🙏 தூத்துக்குடியில் இருந்து சுமார் 24 கி.மீ தொலைவில் ராஜபதி என்னும் ஊர் உள்ளது. ராஜபதியில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது. இந்த கோயிலின் சிறப்புகள் என்ன? 🙏 இத்தல மூலவரான கைலாசநாதர் லிங்கத்தின் நான்கு புறங்களிலும் நான்கு சக்கர வடிவங்கள் அமைந்துள்ளன. ஈசனின் வாகனமான நந்தி, பிரதான சன்னதியின் முன் பிரதோஷ நந்தி என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார். 🙏 கருவறைக்கு இடது புறத்தில் சௌந்திர நாயகி தனிச்சன்னதியில் காட்சியளிக்கிறாள்.  🙏 இத்தலம் நவகைலாயங்களில் கேது தலமாக விளங்குகிறது. கண்ணப்ப நாயனாருக்கு இத்தலத்தில் தனிச்சன்னதி அமைந்துள்ளது. 🙏 கண்ணப்ப நாயனார் சிலையின் உயரம் 4.5 அடி ஆகும். இவருக்கு மிருகசீரிஷ நட்சத்திரத்த