Skip to main content

காத்தல் & அழித்தல்

 காத்தல் & அழித்தல் 


காத்தலாவது யாது?


தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன போகங்களை நிறுத்தல்.


விளக்கக்குறிப்பு: 


“நீ நித்திரை கொள்ளும்போது உனது மனைவி, மக்கள், ஆடு, மாடு, தோட்டம், துரவு, கடை எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வது யார்? ஏன் விழித்தெழுந்தவுடன் எல்லாவற்றையும் நீயே பார்த்துக்கொள்வதாக உன் தலையில் தூக்கி வைத்துகொண்டு ஆடுகின்றாய்?” 

- சிவயோகர் சுவாமிகள் வாக்கு


அழித்தலாவது யாது?


தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தில் ஒடுக்குதல்.

 

விளக்கக்குறிப்பு:  


அழித்தல் என்றவுடன் பலருக்குப் பயமாக இருக்கும். ஆனால் அழித்தல் இருந்தால்தான் புத்துயிர்ப்பும் இருக்கும். உண்ட உணவு செரித்துக் கழிக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள். பிறந்தவர் யாவரும் இறக்காமலேயே இருந்தால் இந்தப் பூமி தாங்குமா? அழித்தல் என்பது முற்றிலும் இல்லாமல் செய்வது அல்ல. 


வெளிப்படையாகப் புலனாகின்றவற்றைப் பரு உருவம் என்பர். வெளிப்படையாகப் புலனாகாதவற்றை சூட்சுமம் என்பர். பரு உருவத்தில் உள்ள தனு, கரண, புவன, போகங்களை அவற்றின் மூலப்பொருளான சூட்சுமமான மாயையிலே ஒடுக்குவது அழித்தல் ஆகும். சூட்சுமமான மாயையில் இருந்து தனு, கரண, புவன, போகங்களை மீண்டும் வெளிப்படையாக பருப்பொருட்களாகத் தோற்றுவித்தல் படைத்தல் ஆகும்.  


”இல்லது தோன்றாது; உள்ளது அழியாது” 


என்பது சைவத்தின் சற்காரிய விதி மட்டுமல்ல, ஐன்ஸ்டீன் சொன்ன இன்றைய விஞ்ஞானத்தின் சட-சக்தி பரிணாம விதியும் (E = mc2 ) ஆகும்.

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந்தது

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சனிவார்வாடா (Shaniwarwada)-Pune

  நான் புனேக்கு (Pune) எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். எனக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி புனேவை சுற்றி பார்க்க விருப்பமாக இருந்தது. அலுவலகத்தில் பயணத்திற்கான நேரத்தை பெற்று கொண்டு (14.04.2023) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. நான் தங்கி இருக்கும் Hotel விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார்.  பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது.  முதலில் நான் சனிவார்வாடா பயணித்தேன்... இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம். சனிவார்வாடா , மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம