Skip to main content

சிவலிங்கத்தின் தத்துவம்

 

சிவலிங்கத்தின் தத்துவம்:


சிவபெருமான் அருவம், உருவம், அருஉருவம் 

என மூவகையான திருமேனிகொண்டு அருள்பாலிக்கின்றாா்.


அவற்றுள் சிவலிங்கம் அருவத் திருமேனியாகும்.

இலிங்கம் என்பதற்குத் சித்தாித்தல் என்பது பொருள்.

லிங் - லயம். 

கம்- தோற்றம்.

சங்கார காலத்தில் பிரபஞ்சங்கள் ஒடுங்கியபின் சிருஷ்ஷக்காலத்தில் அதனின்றும் உலகம் தோன்றும் எனப்படுதலினால் லிங்கம் என்பதற்குப் படைப்பு முதலியவற்றால் உலகைச் சித்தாித்தல் என்ற பொருள் பொருத்தமாகிறது.


சிவபெருமானை நாம் வழிபடுவதற்கு அடையாளமாகச் சிவலிங்கம் திருக்கோயில்களில் விளங்குகின்றது.


காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் நீள்நாகம் அணிந்தாா்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம் என்பாா் சேக்கிழாா்.


சிவலிங்கம் மும்மூா்த்தி வடிவமாக விளங்குகின்றது.

லிங்க வடிவிலுள்ள 


1) ஆவுடையாாின் அடிப்பாகம் பிரம்ம பாகம்.

 

2) நடுப்பகுதி விஷ்ணுபாகம்.


3)மேல் உள்ள பாணம் உருத்திர பாகம். 


இவை முறையே இச்சா சக்தி, கிாியா சக்தி, ஞானா சக்தி என மூன்று சக்திகளாகவும் விளங்குகின்றன.


சிவலிங்க பாணத்தின் மேல்பாகம் ஈசான முகமாகவும், கிழக்குப் பாகம் தத்புருஷமுகமாகவும், தெற்கு அகோரமுகமாகவும், மேற்கு சத்யோஜாத முகமாகவும் ,வடக்கு வாமதேவ முகமாகவும் விளங்கிச் சிவபெருமான் சதாசிவமூா்த்தமாகக் காட்சியளிக்கிறாா்.


சிவலிங்கம் ஐந்து வகைப்படும். 

அவை 


1. சுயம்புலிங்கம் - தானே தோன்றியது .


2. கணலிங்கம் - விநாயகா் முருகன் முதலிய கணநாதா்களால் ஸ்தாபிக்கப்பெற்றது.


3.தெய்வீகலிங்கம் - பிரமன் திருமால் இந்திரன் முதலிய தேவா்களால் நிறுவப்பெற்றது.


4.ஆாிடலிங்கம் - வசிஷ்டா் அகஸ்தியா் முதலிய ரிஷிகளாலும் அசுரா் முதலியோராலும் நிறுவப்பெற்றது.


5 மானுட லிங்கம் - மனிதா்களால் ஸ்தாபிக்கப்பெற்றது.


            சிவாயநம

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந்தது

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சனிவார்வாடா (Shaniwarwada)-Pune

  நான் புனேக்கு (Pune) எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். எனக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி புனேவை சுற்றி பார்க்க விருப்பமாக இருந்தது. அலுவலகத்தில் பயணத்திற்கான நேரத்தை பெற்று கொண்டு (14.04.2023) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. நான் தங்கி இருக்கும் Hotel விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார்.  பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது.  முதலில் நான் சனிவார்வாடா பயணித்தேன்... இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம். சனிவார்வாடா , மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம