Skip to main content

சிவமயம் சிவாயநம

 

சிவமயம் சிவாயநம 



கூத்தனூர் சரஸ்வதி கோவில் பெருமையும் அதன் சிறப்பையும் பற்றித் தெரிந்து கொள்வோம்.



1.தமிழ்நாட்டிலேயே சரஸ்வதி தேவிக்கு என்றே தனிக்கோயில் உள்ள திருத்தலம் கூத்தனூர்.



2.சரஸ்வதி இத்தலத்தில் கருவறையில் கோயில் கொண்டதோடு மட்டுமன்றி அரிசொல் ஆறு எனப்படும் அரசலாற்றில் கங்கை, யமுனை நதிகளோடு கலந்து தட்சிண திரிவேணி சங்கமாக பரிணமிக்கிறாள் என பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


3.ஒரு சமயம் நான்முகனுக்கும் சரஸ்வதிக்கும் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக இருவரும் பூமியில் பகுக்காந்தன், சிரத்தை எனும் பெயர்களில் பிறக்க, சிரத்தையாக பிறந்த சரஸ்வதி இத்தலத்தில் கோயில் கொண்டாள் என ஸ்தலவரலாறு கூறுகிறது.


4.பகுகாந்தனாகப் பிறந்த நான்முகன் பித்ரு காரியங்களில் முக்கியமாகப் போற்றப்படுவார் என ஈசன் அருள் வழங்கியதால் கூத்தனூரில் அரசலாற்றில் புரியும் பித்ரு காரியங்கள் விசேஷ பலன்களைத் தருவதாக உள்ளது.



5.அம்பாள்புரி, ஹரிநாகேஸ்வரம் என புராண காலத்தில் அழைக்கப்பட்ட இத்தலத்தை இரண்டாம் ராஜராஜன் தன் சபையில் அரசவைப்புலவராக விளங்கிய சரஸ்வதியின் அருள் பெற்ற ஒட்டக் கூத்தருக்கு பரிசாக வழங்கினார்.


6(ஒட்டக்)கூத்தருக்குப் பரிசாக வழங்கப்பட்டதால் இத்தலம் கூத்தன்+ ஊர் = கூத்தனூர் என்றாயிற்று. ஒட்டக்கூத்தருக்கும் ஆலயத்தில் தனி சந்நதி உள்ளது.



7.விமான கலசம் ஞானத்தின் உருவாய் சரஸ்வதி இங்கு உறைவதைக் குறிக்கும் வகையில் ஐந்து எனும் எண்ணிக்கையில் உள்ளது.



8.கருவறையில் வீணை இல்லாத

சரஸ்வதியை தரிசிக்கலாம்.


9. அர்த்த மண்டபத்தில் உற்சவ விக்ரகங்கள் அருள்கின்றன.


10.இத்தல நடராஜரின் பாதத்தின் கீழ் காணப்படும் முயலகன், பக்கவாட்டில் இல்லாமல், நேராக உள்ளது சிறப்பு.


11.மகாமண்டபத்தின் இடது புறம் நான்குமுகங்களுடன் வேதம் ஓதும் நான்முகன்

அருள்புரிகிறார்.


12. கருவறையின் முன் சரஸ்வதியின் வாகனமான ராஜஹம்ஸம் எனப்படும் அன்னம்

அன்னையை நோக்கி கம்பீரமாக நிற்கிறது.


13.கம்பருக்காக இந்த சரஸ்வதி கிழங்கு விற்கும் மூதாட்டியாகவும், இடையர் குலப் பெண்ணாகவும் நேரில் வந்து சங்கடங்கள் தீர்த்தவள்.



14.ஒட்டக்கூத்தரை எதிரிகள் சூழ்ந்து கொண்டு, பரணி பாடினால் விட்டுவிடுவதாகக் கூற, கூத்தரின் நாவில் அமர்ந்து பரணி பாடினாள் இந்த அன்னை. தன்னைக் காத்த இந்த சரஸ்வதியை 'ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியவே' என மனதாறப் பாடிப் பணிந்தார் ஒட்டக்கூத்தர்.


15.பிறவியிலேயே பேச்சிழந்த புருஷோத்தமன் எனும் பக்தனுக்கு தன் தாம்பூல எச்சிலைத் தந்து பூவுலகம் போற்றும் புருஷோத்தம தீட்சிதர் ஆக்கிய பெருமை பெற்றவள் இந்த தேவி.


16. பௌர்ணமி அன்று இந்த அன்னைக்குத் தேனபிஷேகம் செய்து அந்த பிரசாத தேனை மோதிரவிரலால் சரஸ்வதியை தியானித்தபடி உட்கொள்ள, கல்வியறிவு பெருகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.


17. சரஸ்வதி பூஜையன்று பக்தர்கள் சரஸ்வதி தேவியின் பாதங்களை தாங்களே பூஜிக்கும் வகையில் கருவறையிலிருந்து நீண்ட பாதங்கள் அமையுமாறு அலங்கரிப்பது கண்கொள்ளாக் காட்சி.


18.விஜயதசமி அன்று புகழ்பெற்ற கலைஞர்கள் இத்தலம் வந்து தங்கள் கலைத்திறமையை தேவிக்கு அர்ப்பணிப்பது பாரம்பரிய வழக்கம்.


19.சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவ மாணவியர் தேர்வு எழுதும் முன் தங்கள் எழுதுகோலை இந்த தேவியின் முன் வைத்து வணங்கி பின்பே தேர்வு எழுத செல்கின்றனர்.


20.மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் எனும் ஊரின் அருகே அரை கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது.


திருச்சிற்றம்பலம்.

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந்தது

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சனிவார்வாடா (Shaniwarwada)-Pune

  நான் புனேக்கு (Pune) எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். எனக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி புனேவை சுற்றி பார்க்க விருப்பமாக இருந்தது. அலுவலகத்தில் பயணத்திற்கான நேரத்தை பெற்று கொண்டு (14.04.2023) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. நான் தங்கி இருக்கும் Hotel விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார்.  பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது.  முதலில் நான் சனிவார்வாடா பயணித்தேன்... இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம். சனிவார்வாடா , மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம