Skip to main content

தினம் ஒரு தரிசனம்

 தினம் ஒரு தரிசனம்.. நான்கு சக்கர வடிவங்கள்🙏.. பஞ்ச தீபாராதனை..!!


 

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்...!!



🙏 தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...


இந்த கோயில் எங்கு உள்ளது?


🙏 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராஜபதி என்னும் ஊரில் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.


இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?


🙏 தூத்துக்குடியில் இருந்து சுமார் 24 கி.மீ தொலைவில் ராஜபதி என்னும் ஊர் உள்ளது. ராஜபதியில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது.


இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?


🙏 இத்தல மூலவரான கைலாசநாதர் லிங்கத்தின் நான்கு புறங்களிலும் நான்கு சக்கர வடிவங்கள் அமைந்துள்ளன. ஈசனின் வாகனமான நந்தி, பிரதான சன்னதியின் முன் பிரதோஷ நந்தி என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.



🙏 கருவறைக்கு இடது புறத்தில் சௌந்திர நாயகி தனிச்சன்னதியில் காட்சியளிக்கிறாள். 


🙏 இத்தலம் நவகைலாயங்களில் கேது தலமாக விளங்குகிறது. கண்ணப்ப நாயனாருக்கு இத்தலத்தில் தனிச்சன்னதி அமைந்துள்ளது.


🙏 கண்ணப்ப நாயனார் சிலையின் உயரம் 4.5 அடி ஆகும். இவருக்கு மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இங்கு மிகச் சிறப்பாக நடந்து வருகின்றன.


🙏 பொதுவாக அனைத்து சிவன் கோயில்களிலும் நவகிரக சன்னதி இருக்கும். அதற்கு மாறாக இத்தலத்தில் மிகவும் சிறப்பம்சமாக நவலிங்க சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.


🙏 காளஹஸ்தி கோயிலுக்கு இணையான தலம் என்பதால் இக்கோயில் "தென் காளஹஸ்தி" என அழைக்கப்படுகிறது.


🙏 இக்கோயிலில் 63 நாயன்மார்கள், காளஹஸ்தி விநாயகர், ஆதி கைலாசநாதர், காளத்தீஸ்வரர் ஆகியோர் தனிச்சன்னதியில் காட்சி தருகின்றனர்.


வேறென்ன சிறப்பு?


🙏 வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் இத்தலத்தில் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் நுழைவு முன் மண்டபத்தில் அதிகார நந்தியும், எதிரே பைரவரும் வீற்றிருக்கின்றனர்.



🙏 பொதுவாக சிவனுக்கு தீபாராதனை மட்டும் காட்டுவர். ஆனால் இக்கோயிலில் சிவனைச் சுற்றிலும் பஞ்ச தீபாராதனை காட்டுகின்றனர். 


🙏 ஏனென்றால் சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என ஐந்து முகங்கள் உண்டு என்பதால் இங்கு பஞ்ச தீபாராதனை காட்டுகின்றனர்.


🙏 இக்கோயிலின் தலவிருட்சமாக நெல்லிமரம் உள்ளது. மேலும் இக்கோயிலில் பாலாவி தீர்த்தம் அமைந்துள்ளது.


🙏 இத்தலத்தில் "நித்ய அக்னி" எனப்படும் விநாயகர், கைலாசநாதர் மற்றும் அம்பாள் ஆகியோருக்காக மூன்று கலசங்கள் வைத்து தினசரி யாகம் நடத்தி சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.


என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?


🙏 இத்தலத்தில் மகா சிவராத்திரி மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மேலும் இக்கோயிலில் திருவாதிரை, சிவராத்திரி, மாத பிறப்பு, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, கிருத்திகை, சஷ்டி, கார்த்திகை சோமவாரம் அன்று 108 சங்காபிஷேகம், ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் என சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.



எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?


🙏 நவகிரகத்தில் எந்த கிரக தோஷம் இருக்கிறதோ அந்த கிரக லிங்கத்திற்கு பக்தர்கள் தங்கள் கைகளால் அபிஷேகம் மற்றும் பூஜை செய்து இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.


🙏 மரண பயம் நீங்கவும், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கவும், குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் நீங்கவும், கேது தோஷத்துக்காகவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.


இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?


🙏 இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந்தது

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சனிவார்வாடா (Shaniwarwada)-Pune

  நான் புனேக்கு (Pune) எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். எனக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி புனேவை சுற்றி பார்க்க விருப்பமாக இருந்தது. அலுவலகத்தில் பயணத்திற்கான நேரத்தை பெற்று கொண்டு (14.04.2023) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. நான் தங்கி இருக்கும் Hotel விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார்.  பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது.  முதலில் நான் சனிவார்வாடா பயணித்தேன்... இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம். சனிவார்வாடா , மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம