Skip to main content

நவகைலாயங்கள் பற்றிய வரலாறு

 #சிவபெருமானுக்குரிய

தமிழகத்தில் உள்ள

#நவகைலாயங்கள் பற்றிய வரலாறு:


தமிழகத்தின் நவ கைலாயங்கள் என்பவை தமிழ்நாட்டின் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஒன்பது சிவாலயங்கள் உள்ள ஊரைக் குறிப்பதாகும். இவை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ளது. இந்த தலங்களைத் தரிசித்தால் செய்த பாவங்களிலிருந்து விடுபட்டு முக்தி அடையலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தலங்களை மகாசிவராத்திரியன்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.


#புராண_வரலாறு:


அகத்திய முனிவரின் சீடர்களில் முக்கியமானவரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பி தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டதாகவும். அதற்கு அகத்திய முனிவரும் தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டதாகவும் அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச முனிவரும் தனது குரு கூறியபடி வழிபட்டு முக்தி அடைந்தார் என்றும் அப்படி அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்கள் தான் இப்போது நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுவதாகவும் இத்தலங்களின் வரலாறு கூறுகின்றது.


#நவகைலாயங்கள்:


பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்த பூமங்கலம் ஆகிய ஊர்களை நவகைலாயங்கள் என்று அழைக்கின்றனர். இவற்றில் முதல் மூன்று தலங்களை மேல்கைலாயங்கள் என்றும், அடுத்த மூன்று தலங்களை நடுகைலாயங்கள் என்றும், இறுதி மூன்றினை கீழ்க்கைலாயங்கள் என்றும் வகைப்படுத்துகின்றனர்.


இந்த நவகைலாயத் தளங்களில் நவக்கிரங்களின் வழிபாடுகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்தத் தலங்களில் நவக்கிரங்கள் வழிபட்டுள்ளன என்று கூறப்படுகிறது.


1. #பாபநாசம்_பாபநாசநாதர் 

(மேல் கைலாயம்) (சூரியன் தலம்)


பாபநாசநாதர் கோயில் தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசத்தில் உள்ள நவ கைலாயத்தில் முதல் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். 


இறைவன் சிவனுக்கும் பார்வதிக்கும் கயிலை மலையில் நடந்த திருமணத்தை அகத்தியர் காண முடியாமல் போனது. அகத்தியரின் இறைவனின் திருமணக் கோலத்தைக் காண விரும்பி இறைவனை வேண்டினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அகத்தியருக்கும் லோபமுத்திரைக்கும் இத்தலத்தில் இறைவன் தன் இறைவியுடன் திருமணக் கோலத்தில் காட்சியளித்தார். இக்கோயிலுக்கு அருகிலுள்ள அருவி அகத்தியர் அருவி என அழைக்கப்படுகிறது.


உரோசம முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது மலர்களை மிதக்க விட்டு அம்மலர்கள் கரைசேர்ந்த இவ்விடங்களில் சிவாலயங்கள் அமைந்து சிவனை வழிபட்டதாகவும், அவற்றில் முதலாவது மலர் கரைசேர்ந்த பாபநாசத்தில் அமைத்த கோயில் பாபநாசநாதர் கோயிலெனக் கூறப்பட்டுள்ளது. இக்கோயில் சிவவடிவான இலிங்கமானது நவகோள்களில் ஒன்றான சூரிய தேவனின் அம்சமாக கருதப்படுகிறது. கைலாயநாதரை முதன்மைக் கடவுளாகக் கொண்டு நவகோள்களுக்குரியவையாக தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நவகைலாய கோயில்களின் வரிசையில் முதலாவதான இக்கோயில் சூரியனுக்குரியதாகும்.


திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தமிழ் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் இறைவன் பாபநாசநாதர், இறைவி உலகம்மை ஆவர். கோயிலின் அனைத்துக் கருவறைகளயும் உள்ளடக்கியவாறு கோயிலைச் சுற்றிக் கருங்கல் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சாளுக்கிய பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களாலும் நாயக்கர் அரசர்களாலும் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாயக்கர் காலக் கலைப்பாணியிலான சிற்பங்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன.


கோயிலுள்ள அனைத்துக் கருவறைகளையும் உள்ளடக்கியவாறு கருங்கல்லலான சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளது. நுழைவாயில் கோபுரம் ஏழடுக்குகள் கொண்டதாகும். கோயிலின் முதன்மைக் கடவுளாக பாபநாசநாதர் இலிங்க வடிவிலுள்ளார். இறைவி உலகம்மையின் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் வெளிச்சுவற்றில் விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவகோள்கள் ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொடிமரத்தை அடுத்துள்ள சிறுகோயிலில் யாளிகளைமைந்த தூண்களைக் கொண்ட மண்டபத்தில் நடராசர் உள்ளார். இங்கு ஆனந்த தாண்டவ கோலத்தில் காணப்படும் நடராசர் புனுகு சபாபதி என அழைக்கப்படுகிறார்.இக்கோயில் குளம் பாபநாச தீர்த்தம் எனப்படுகிறது. மேலும் அகத்திய தீர்த்தமும் கல்யாணி தீர்த்தமும் இக்கோயிலைச் சேர்ந்தவையாகும்.


கோயிலின் வரலாறு சரியானபடி கணிக்க முடியவில்லையென்றாலும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட சந்திரகுல பாண்டியன் என்ற பாண்டிய அரசனால் இக்கோயிலின் நடுக் கோயிலும் விமானமும் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. மதுரை நாயக்க வம்சத்தைச் சேர்ந்த, வீரப்ப நாயக்கரால் (கிபி1609-23), யாகசாலை, கொடிமரம், நடராசர் மண்டபம் கட்டப்பட்டன. தற்காலத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறையால் இக்கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது.


2.#சேரன்மகாதேவி_அம்மைநாதர்: (சந்திரன் தலம்) (மேல் கைலாயம்)


சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில் தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியிலுள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் நவகைலாயங்களில் இரண்டாவதாக சந்திரனுக்குரியத் தலமாகக் கருதப்படுகிறது. இத்தலத்தின் மூலவர் கைலாசநாதர், அம்மைநாதர் என்றும், அம்மன் ஆவுடைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றார்.


திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சேரன்மாதேவி திருத்தலம். இங்கு ஆவுடைநாயகி உடனாய அம்மைநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இது நவ கயிலாயத்தில் ஒன்றாகவும், சந்திரனுக்குரிய தலமாகவும் போற்றப்படுகிறது. இந்தக் கோவிலில் ‘அம்மைநாதர்’ என்ற பெயரில் இறைவனும், ‘ஆவுடைநாயகி’ என்ற பெயரில் இறைவியும் அருள்பாலித்து வருகிறார்கள். சிவ தரிசனம் பெற விரும்பிய உரோமச முனிவர், அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி தாமிரபரணி நதிக்கரைக்கு வந்தார். அங்கு ஒன்பது மலர்களை, நதியில் விட்டார். அந்த ஒன்பது மலர்களும் ஒதுங்கிய கரையினில்தான் நவ கயிலாயங்கள் எனப்படும் சிவன் கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றின் இரண்டாவது மலர் ஒதுங்கிய இடத்தில் உரோமச முனிவர், லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். அதுதான் சேரன்மாதேவி திருத்தலம் என்று சொல்லப்படுகிறது.


பிற்காலத்தில் உரோமச முனிவர் வழிபட்ட சிவலிங்கமானது, ஒரு அரச மரத்தின் கீழ் இருந்தது. இந்தப் பகுதி யில் வசித்த சகோதரிகளான சிவபக்தைகள் இருவர், நெல் குத்தி அரிசி வியாபாரம் செய்து வந்தனர். தினமும் இத்தல லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கிய பின்பே, அவர்கள் தங்களுடைய வேலையைத் தொடங்குவார்கள். ‘இந்த லிங்கம், மரத்தடியில் யாராலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறதே’ என்று ஆதங்கப்பட்ட அந்த சிவ பக்தைகள், சிவபெரு மானுக்கு கோவில் ஒன்றை அமைக்க முடிவு செய்தனர். ஆனால் அவர்களிடம் அதற்கான பணம் இல்லை. அவர்கள் தங்களது உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை சேமிக்கத் தொடங்கினர். அவர்களது பக்தியை கண்டு மகிழ்ந்த சிவன், அடியார் வடிவில் அந்தப் பெண்களின் வீட்டிற்கு சென்றார். அவரை வரவேற்ற சகோதரிகள் உபசரித்து உணவு பரிமாறினர். அப்போது வீட்டில் விளக்கு எரியவில்லை. அதை சுட்டிக்காட்டிய அடியவர், “மங்களம் இல்லாத இவ்வீட்டில் நான் சாப்பிடமாட்டேன்” என்று எழுந்தார்.


சகோதரிகள் பதறிப்போய் அவசர அவசரமாக விளக்கைத் தேடினர். விளக்கு தென்படாததால் சமையலுக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து, அதில் நெய்விட்டு விளக்கேற்றினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அடியார் உருவத்தில் இருந்த சிவபெருமான், உணவருந்திய பின் தன்னுடைய சுய உருவத்தை, அந்த சகோதரிகளுக்கு காண்பித்து அருளாசி கூறி மறைந்தார். அதன்பின்பு அவர்களது இல்லத்தில் செல்வம் பெருகியது. அதைக் கொண்டு இங்கு கோவில் எழுப்பினர். அரிசி வியாபாரம் செய்பவர்கள், இந்தக் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து, அரிசி தானம், அன்னதானம் செய்தால் வியாபாரம் செழிக்கும் என்கிறார்கள். மாதுளம் பழச்சாறு அபிஷேகம் செய்து அம்பாள் சன்னிதி முன்பு தட்டில் அரிசியை பரப்பி, அதன் மத்தியில் உடைத்த தேங்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றுவதும் முக்கிய வழிபாடாக இருக்கிறது. சுவாமி - அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.


இந்தக் கோவிலின் மண்டபத் தூணில், சிவ பூஜை செய்த உரோமச முனிவரின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. சகோதரிகள் இருவர் நெல் குத்தி, அரிசி புடைக்கும் சிற்பம், வடக்குபுறமாக ஒரு தூணில் உள்ளது. இங்குள்ள கோவில் கல்வெட்டுகளில் இந்த ஊர், ‘சேரன்மகாதேவி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகள் யாவும் பாண்டியர் காலத்து கல்வெட்டுகளாகும். இந்தக் கோவிலை நந்தனார் தரிசித்திருக்கிறார். அதற்கு அடையாளமாக அவரது சிற்பம், கொடிமரத்தின் கீழ் பீடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இவர் இங்கிருந்து சுவாமியை வணங்கியபடி இருக்க, நந்தி சற்று விலகியிருக்கிறது. கொடிமரத்தின் அருகில் நின்று, விலகிய நந்தியையும், சிவபெருமானையும் ஒருசேர தரிசிக்கலாம். திருநெல்வேலியில் இருந்து சேரன்மாதேவி செல்ல ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன.


3.#கோடகநல்லூர்_கைலாசநாதர்: (செவ்வாய் தலம்_மேல் கைலாயம்)


கோடகநல்லூர் கைலாசநாதர் கோயில் திருநெல்வேலி மாவட்டம், கோடகநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கோடகநல்லூரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் நவகைலாயங்களில் ஒன்றாகவும், செவ்வாய் தலமாகவும் கருதப்படுகிறது.


இத்திருக்கோயிலை வழிபடுவது சிதம்பரம் அருகில் உள்ள வைத்தீஸ்வரன் திருக்கோயிலை வழிபடுவதற்கு சமம் என கூறப்படுகிறது.


#தல_வரலாறு:


பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முனிவர் இப்பகுதியில் தவம் செய்துகொண்டிருந்தார். அவருக்கு உதவியாக அவரது மகனும் இருந்தார். அவர் விறகு பொறுக்க காட்டிற்குள் சென்றுவிட்டார். அப்போது ஒரு ராஜகுமாரன் அங்கு வந்தான். அவனுக்கு ராஜ்ய அபிவிருத்திற்காக யாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. நிஷ்டையில் இருந்த முனிவரை எழுப்பி யாகம் செய்யும் முறை பற்றி கேட்டறியலாம் என எண்ணினான். ஆனால், எவ்வளவோ எழுப்பியும் அவர் எழ மறுத்துவிட்டார். கோபமடைந்த ராஜகுமாரன் ஒரு இறந்த பாம்பை எடுத்து முனிவரின் கழுத்தில் போட்டுவிட்டு சென்றுவிட்டான். நிஷ்டையில் இருந்ததால் முனிவருக்கு பாம்பு கழுத்தில் கிடப்பது தெரியவில்லை. விறகு பொறுக்கச் சென்ற மகன் திரும்பி வந்தார். தன் தந்தையில் கழுத்தில் பாம்பு கிடப்பதை பார்த்து கோபமடைந்தார். இந்த செயலை செய்தது ராஜகுமாரன் என்பது தெரியவந்தது.


உடனே அரண்மனைக்கு சென்று, “”என் தந்தையின் கழுத்தில் போடப்பட்ட செத்த பாம்பு உயிர்பெற்று உன் தந்தையை தீண்டும்,” என சாபமிட்டுவிட்டு சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து மகாராஜாவின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள் ராஜாவுக்கு சர்ப்பதோஷம் இருப்பதாக கூறினர். ராஜா பாம்பிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள மிகவும் மறைவான இடத்தில் ஒரு மண்டபம் கட்டி வசித்தார். அதன் உள்ளே ஒரு எறும்புகூட புக வழியில்லை. ஒருநாள் ராஜா மாம்பழம் சாப்பிடும்போது உள்ளே குட்டியாக இருந்த பாம்பு பழத்தினுள் இருந்து வெளிப்பட்டு ராஜாவை தீண்டியது. ராஜா இறந்துபோனார்.


ராஜாவை தீண்டிய பாவம் நீங்க விஷ்ணுவை நோக்கி அந்த பாம்பு தியானம் செய்தது. விஷ்ணு அங்கு தோன்றி சிவபெருமானை வழிபட்டால் பாவம் நீங்கும் என்றார். அதன்படி சிவனை வழிபட்ட பாம்பு சாப விமோசனம் பெற்றது. பாம்பின் பாவத்தை போக்க சிவன் கைலாயத்தில் இருந்து வந்ததால் “கைலாசநாதர்’ என்னும் பெயர் பெற்றார். கைலாசநாதர் கோயில்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டன. அதில் இந்தக் கோயிலும் ஒன்று. அங்காரகன் இங்கு சிவனை வழிபட்டார். அதனால் இது செவ்வாய் பரிகார தலமாயிற்று. இங்கு கைலாசநாதரும் சிவகாமி அம்மையும் காட்சி தருகின்றனர்


அனந்தகவுரி அம்பாள்:


கொடிமரம், பலிபீடம், பரிவார மூர்த்திகள் என எதுவுமே இல்லாத வித்தியாசமான கோயில் இது. சுவாமியே பிரதானம் என்பதால் இந்த அமைப்பில் இருப்பதாக சொல்கிறார்கள். துவாரபாலகர்களின் இடத்தில் கல்யாணவிநாயகர், முருகன் இருக்கின்றனர். நவ கைலாய தலங்களிலேயே பெரிய மூர்த்தி இவர். எனவே, இவருக்கு எட்டு முழத்தில், எட்டு வேட்டிகளை அணிவித்து அலங்கரிக்கிறார்கள். சுவாமிக்கு துவரம்பருப்பு நைவேத்யம் படைத்து, சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் செவ்வாய்தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. இக்கோயிலில் ஐந்துதலை நாகத்தின்கீழ் நின்ற நிலையில் காட்சி தரும் அனந்தகவுரியின் சிலை உள்ளது. இவளை, “சர்ப்பயாட்சி’, “நாகாம்பிகை’ என்றும் அழைக்கிறார்கள். சிவகாமி அம்பாளுக்கு தனிச்சன்னதி இருக்கிறது.


இங்குள்ள நந்திக்கு, செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப்போகும் பெண்கள், 58 விரலிமஞ்சளை, தாலிக்கயிறில் கட்டி, மாலையாக அணிவித்து வழிபடுகிறார்கள்.


மனித வாழ்க்கையில் செவ்வாய் திசை ஏழு ஆண்டுகள் நடக்கும். இந்த ஏழு ஆண்டுகளில் செவ்வாய் பகவானின் அருள் இருந்தால்தான் வாழ்க்கை செம்மையாக நடக்கும். சிலருக்கு ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றுள்ளதாக சொல்வார்கள். பெண்களுக்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் நடக்க தாமதமாகும் என்பதுண்டு. இப்படிப்பட்டவர்கள், இக்கோயிலுக்கு சென்று வரலாம்.


#அமைவிடம்:


திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து சேரன்மகாதேவி – முக்கூடல் செல்லும் சாலையில் 16 கி.மீ தொலைவில் உள்ள நடுக்கல்லூர் என்ற ஊரிலிருந்து தெற்கே 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.


4.#குன்னத்தூர்_கோதபரமேசுவரர் (இராகு தலம்_நடு கைலாயம்)


 குன்னத்தூர் கோத பரமேசுவரர் கோயில் என்பது திருநெல்வேலி நகர் தொடருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிமீ தொலைவில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் நவகைலாயங்களில் ஒன்றாகவும், ராகு தலமாகவும் கருதப்படுகிறது.


ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்திலும், ராகு பகவான் 18 ஆண்டுகள் ஆட்சி செய்வார். அந்த சமயத்தில் அந்த மனிதர் ராகு திசையின்போது நடக்கும் சஞ்சாரத்திற்கேற்ப அவரது பலன்கள் மாறுபடும். ராகுவின் தாக்கம் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டால் அவர் பரிகாரம் செய்ய வேண்டிய தலம் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நான்காம் கயிலாயம் என்று அழைக்கப்படும் சங்காணியாகும். காணி என்றால் நிலம். செங்+காணி என்றால் செந்நிறத்தில் உள்ள நிலம் என்று பொருள். அதன்படி பொத்தையில் மண் செந்நிறமாக காட்சியளிக்கிறது. மேலும் குன்று போன்ற இடத்தில் இந்த ஊர் உள்ளதால், இந்த ஊர் குன்றத்தூர் எனவும் அழைக்கப்படுகிறது.


கோதபரமேஸ்வரர் கோவில் : பல சிறப்புகளை கொண்ட இந்த ஊரில் கோத பரமேசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவன் பெயர் கோதபரமேஸ்வரர் என்கிற கயிலாசநாதர். இறைவி சிவகாமி அம்மன். கோவிலின் தீர்த்தம் தாமிரபரணி. தல விருட்சம் வில்வம். நெல்லையப்பர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வரும் செப்பேடு ஒன்றில், இத்திருத்தலத்தின் பெயர் திருநாங்கீசநேரி என்றும், இத்தலத்து இறைவன் திருநாகீசர்(ராகு தலமான திருநாகேசுவரம் போன்று) என்றும் அழைக்கப்பட்டுள்ள செய்தி தெரியவருகிறது. அகத்திய மாமுனிவரின் முதல் சீடரும், பிரம்மனின் பேரனுமான உரோமச மகரிஷி, தான் முக்தியடைய நவ கயிலாயத்தை உருவாக்கினார். அதில் நான்காம் கயிலாயம் சங்கானி எனும் திருவேங்கடநாதபுரம். இது, ராகு ஸ்தலமாக அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில் தாமிரபரணி கரையில் கோவில் இருந்ததாகவும், இயற்கை சீற்றத்தினால், தற்போது ஆற்றின் கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோவில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


#தல_வரலாறு : 


முற்காலத்தில் உரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்த சிவனை வணங்கி பலரும் நன்மை அடைந்தனர். ஆனால் பிற்காலத்தில் ஏற்பட்ட இயற்கை மாற்றத்தினால் சங்கானி கிராமமே காணாமல் போய்விட்டது. அந்த சமயத்தில் குன்னத்தூரை குறுநில மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். இவருக்கு சொந்தமான செங்கானி அருகில் பொத்தை இருந்தது. இந்த பொத்தையில் அரியவகையான மரம் ஒன்று இருந்தது. இந்த மரத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூ பூத்து, ஒரே ஒரு காய் காய்த்து, அந்த காய் பழமாகும். இந்த பழத்தை சாப்பிட்டால் நீண்ட ஆயுளும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும். இதனால் இந்த பழம் மீது அந்த குறுநில மன்னனுக்கு அளவற்ற விருப்பம். அந்த மரத்தை மன்னர் மிகவும் பாதுகாத்து வந்தார். ஒரு சமயம் அந்த ஊரில் வசித்த கர்ப்பிணி பெண் ஒருவர், குளத்தில் தண்ணீர் எடுப்பதற்காக குடத்துடன் சென்றாள். அந்த மரத்தின் அடியில் அந்த பெண் சென்றபோது எதிர்பாராதவிதமாக அந்த அரியவகை மரத்தில் இருந்த பழம், கர்ப்பிணிப்பெண் எடுத்து சென்ற குடத்தில் விழுந்து விட்டது.


அதை கவனிக்காத அந்தப் பெண், வழக்கம்போல் தண்ணீர் எடுத்து விட்டு தனது வீட்டிற்கு சென்று குடத்தை வைத்து விட்டாள். மறுநாள் மரத்தில் இருந்த பழத்தை காணாததை கண்ட மன்னர் திகைத்துப்போனார். யாரோ அந்தப் பழத்தைத் திருடிச் சென்று விட்டனர் என்று எண்ணிய மன்னர், பழத்தை திருடியவர்களை கண்டுபிடிக் குமாறு தன் பணியாளர்களுக்கு உத் தரவிட்டார். மன்னரின் உத்தரவையடுத்து சேவகர்கள், அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சோதனையிட்டனர். இறுதியில் கர்ப்பிணிப்பெண்ணின் வீட்டில் இருந்த குடத்தில் அந்தப் பழம் கிடப்பதை கண்டனர். பழத்தினை அந்தப் பெண்தான் திருடிச் சென்று விட்டதாக சேவகர்கள் கருதினர். இதனையடுத்து அந்தப் பெண்ணை மன்னரிடம் அழைத்து சென்றனர்.

அந்தப் பெண்ணிடம், ‘பழம் உனது குடத்தில் எப்படி வந்தது?’ என்றார் மன்னன். அதற்கு அந்த பெண்மணி, தனது குடத்தில் அந்த பழம் எப்படி வந்தது என்று தனக்கு தெரியாது என்று கூறினாள். ஆனால் அந்த பெண் கூறியதை மன்னன் நம்பவில்லை. அந்த பெண்ணை கழுவில் ஏற்றுமாறு உத்தரவிட்டான். அவளைக் கழுவேற்றும்போது, ‘என்னை கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல், செய்யாத தவறுக்கு என்னை கழுவேற்றிய அரசே... இனி இந்த ஊரில் பசு, பெண்கள் தவிர வேறு எவரும் உயிர் வாழ மாட்டார்கள்’ என்று சாபமிட்டாள். அந்த கர்ப்பிணிப்பெண் இட்ட சாபத்தின்படி அந்த ஊரே அழிந்து காடாகிப் போனது. அந்த ஊரில் பசுக்கள் மட்டும் வாழ்ந்தன. மேலும் உரோமச முனிவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் கேட்பாரற்று கிடந்தது. அப்போது சிவபெருமான் தனது திருவிளையாடலை தொடங்கினார்.


அந்த காட்டில் இருந்த லிங்கத்தின் மீது பசுக்கள் எல்லாம் சென்று பால் சொரிந்தன. இதை அறிந்த சேவர்கள் இந்த தகவலை மன்னரிடம் கூற, அவரும் அந்த அற்புத காட்சியைக் கண்டார். உடனே அவர் சிவபெருமானுக்கு கோவில் கட்டினார். அந்த கோவில்தான் தற்போது உள்ள கோதபரமேசுவரர் ஆலயம். இந்தப் பகுதியில் உள்ள சிவபக்தர்கள் மூலமாக இக்கோவில் சீரமைக்கப்பட்டு, இங்கு தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் சிவராத்திரி, பிரதோஷம் போன்றவை சிறப்பாக நடைபெறும்.


5.#முறப்பநாடு_கைலாசநாதர் (குரு_நடுகைலாயம்)


நவகைலாயத்தில் ஐந்தாவது இடத்தை பெறுவது முறப்பநாடு ஆகும்.இந்த கோயில் நவக்கிரகத்தில் குருபகவான் ஆட்சி பெற்று ஏழாவது இடத்தை பெறுகிறது.குருபகவானின் அருள் பெற நாம் வழிபட வேண்டிய திருத்தலம் முறப்பநாடு ஆகும்.முறப்பநாடு பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் நவகைலாயத்தின் வியாழ பகவானை விட்டிருக்கும் அருள்மிகு கைலாச நாதர் திருக்கோயில் அமைத்துள்ளது.இயற்கை காலில் சூழ்ந்த வனப்புடன் பசுமை கொஞ்சும் காலில் கண்ணனுக்கு விருதாக உள்ளது.வாழை தோட்டங்களும் வயல் வெளிகளும் நிறைந்தஅப்பகுதி சிந்தை கவர்கிறது.நவகாலயத்தின் எந்த கோயிலுக்கும் இல்லாத தனிச் சிறப்பு சிவா பெருமான் குருபாகவனாக அருள் பாலிக்கும் முரப்பாணத்திட்கு மட்டுமே உண்டூ.புண்ணிய மதியம் தாமிரபரணி ஆறு காசியில் உள்ளது போன்று வடகிலுருந்து தெற்கு நோக்கி செல்கிறது.இதனால் இந்த இடத்திற்கு தட்சிணா கங்கை எனப் பெயர்.இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்கு சமம் என்று கூறுவார்கள்.


இக்கோயிலை கட்டியவர் வள்ளல் மகாராஜா மிருந்த முனிவர் பாதயாத்திரை செய்த இடமும் ஸ்ரீ ராமர் பாதம் பட்ட இடமும் காஞ்சனர் மலைக்கு மோட்சம் அளித்த இடமும் இதுவே.இதுவே சோழ மன்னன் ஒருவன் தனக்கு குதிரை முகத்தோடு பிறந்த பெண் குழந்தையை கண்டு கவலையடைந்தான்.தனது மகளுக்கு அமைத்துள்ள குதிரை முகம் மாற வேண்டி சிவா பெருமானை எண்ணி தவம் இருந்தான்.சிவபெருமான் இவர் முன் தோன்றி முறப்பநாடு தாமிரபரணி நதிக்கரையில் போய் நீராடுக என ஆசி வழங்கினார். சிவபெருமானின் திருவுளப்படி சோழ மன்னன் தன் மகளோடு வந்து இங்குள்ள தீர்த்த கட்டத்தில் நீராடினான்.உடனே சோழ மன்னனின் மகளது முகம் மனித முகமாக மாறியது.பின்னர் சிவபெருமானுக்காக சோழ மன்னன் இக்கோயிலை கட்டினான்.


#போக்குவரத்து_வசதி:


திருநெல்வேலிலிருந்து 17 கி.மீ தொலைவில் தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள ஊர் முறப்பநாடு.திருநெல்வேலிலிருந்து வல்லநாடு கொங்கராயக்குறிச்சி கலியாவூர்,உலக்குடி,பூவாணி,ஆல்வார்கற்குளம் செல்லும் நகர பேரூந்துகள் அடிக்கடி செல்கின்றன.திருநெல்வேலி இல் இருந்து தூத்துக்குடி செல்லும் எல்லா பேருந்துகளும் முறப்பநாடு நிற்கும்.


6.#திருவைகுண்டம்_கைலாசநாதர் (சனி _நடுகைலாயம்)


இத்தலம் நவகைலாயங்களில் ஆறாவது தலம். இது சனி தலமாகும். இங்குள்ள கொடிமரம் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். ஒரே ஊரில் நவகைலாயமும், நவதிருப்பதியும் அமைந்துள்ளது விசேஷம். இத்தலத்தின் பூதநாதர் சிலை மிகவும் விசேஷமானது. இது மரத்தால் செய்யப்பட்டது. ஊமையாகப் பிறந்து, திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் சக்தி பெற்ற, குமரகுருபர சுவாமிகள் இவ்வூரில்தான் அவதரித்தார்.


#சனி தலம்:


இக்கோயிலில் சனீஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கைலாசநாதருக்கும், சனிக்கும் விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். சனி தசையால் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் இங்கு பரிகாரம் செய்துகொண்டால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும். இழந்த சொத்துக்களை மீண்டும் பெறலாம் என்பது நம்பிக்கை. இக்கோயில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு ஈடானதாக சொல்கிறார்கள். சனிப்பெயர்ச்சியின்போது பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், இங்கு வேண்டிக்கொண்டால் சனியின் உக்கிரம் குறையும் என்பது நம்பிக்கை.


திருமாலும், திருமகளும் இத்தலத்தில் தங்கியிருப்பதாக ஐதீகம். எனவே இத்தலம் “ஸ்ரீவைகுண்டம்’ என்றழைக்கப்படுகிறது. “வைகுதல்’ என்றால் “தங்குதல்’ என பொருள். இவ்வூரிலேயே 108 திருப்பதிகளில் ஒன்றான, கள்ளபிரான் கோயிலும் அமைந்துள்ளது. இது நவதிருப்பதிகளில் சூரியனுக்குரிய தலமாகும். ஒரே ஊரில் நவகைலாயமும், நவதிருப்பதியும் அமைந்துள்ளது விசேஷம். ஊமையாகப் பிறந்து, திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் சக்தி பெற்ற, குமரகுருபர சுவாமிகள் இவ்வூரில்தான் அவதரித்தார்.


#பூதநாதர் சிறப்பு:


இந்த கோயிலில் உள்ள பூதநாதர் என்ற காவல் தெய்வத்தின் சிலை மிகவும் விசேஷமானது. இது மரத்தால் செய்யப்பட்டது. சித்திரைத் திருவிழாவின்போது, முதலில் இவருக்கே முதல் மரியாதை செய்யப்படுகிறது. இவர் சாஸ்தாவின் அம்சமாக கருதப்படுகிறார். 3ம் நாள் விழாவின்போது, இவர் மீது சுவாமி எழுந்தருளுகிறார். இவருக்கு புட்டு, சர்க்கரைப்பொங்கல், புளியோதரை ஆகியவை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இவருக்கு அபிஷேகம் கிடையாது. சந்தனாதி தைலம் மட்டுமே தடவுகின்றனர். இவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுவது விசேஷம்.


முற்காலத்தில் இக்கோயிலை பூட்டி சாவியை அர்ச்சகர்கள், பூதநாதர் முன்பாகவே ஒப்படைத்துவிட்டு சென்றார்கள். இவரை மீறி யாரும் உள்ளே நுழைய முடியாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வாறு செய்தனர்.


#தல_வரலாறு:


உரோமசர் தாமிரபரணியில் மிதக்க விட்ட மலர்களில் ஆறாவது மலர் கரை ஒதுங்கிய தலம் இது. இங்கு ஒரு லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவர் கைலாசநாதர் எனப்பட்டார். சனிபகவானின் அம்சத்துடன் காட்சி தரும் இவர், சிவகாமி அம்பாளுடன் உள்ளார். சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தியை சுற்றிலும் 108 விளக்குகள் உள்ளது. இந்த விளக்குகளை ஏற்றி சுவாமியை வழிபட்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.


அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த இக்கோயிலில், நவ கைலாய தலங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்த உரோமச முனிவர், மற்றும் நடராஜர், அக்னிபத்திரர், வீரபத்திரர் ஆகியோரின் சிற்பங்கள் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மே

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந்தது

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சனிவார்வாடா (Shaniwarwada)-Pune

  நான் புனேக்கு (Pune) எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். எனக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி புனேவை சுற்றி பார்க்க விருப்பமாக இருந்தது. அலுவலகத்தில் பயணத்திற்கான நேரத்தை பெற்று கொண்டு (14.04.2023) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. நான் தங்கி இருக்கும் Hotel விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார்.  பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது.  முதலில் நான் சனிவார்வாடா பயணித்தேன்... இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம். சனிவார்வாடா , மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம